தேனி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் கொடியரசன் என்பவரது மகன் கிரண் (19). இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக சிறுமியின் சகோதரர் கூடலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் சின்னக்கண்ணு விசாரணை நடத்தினார்.
அதில் இளைஞர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. அதன்பேரில் இளைஞரை போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மகளிடம் பாலியல் அத்துமீறல் : தந்தை சிறையில் அடைப்பு