தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பல்லவராயன்பட்டியைச் சேர்ந்தவர்கள் கோட்டைச்சாமி – ராணி தம்பதி. இவர்களது மகன் சதீஷ்குமாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் - கண்ணகி தம்பதியின் மகளான லாவண்யாவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
அவர்களக்கு தற்போது இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன், மனைவியிடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வேதனையடைந்த லாவண்யா அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
உயிருக்குப் போராடிய லாவண்யாவை உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் அவரது கணவர் சேர்த்தார். அங்கு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் உடற்கூறாய்விற்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சொத்தில் பங்கு வாங்கித்தர வேண்டும் என்றும் வரதட்சணை கேட்டும் அடித்து சித்ரவதை செய்து துன்புறுத்தியதால்தான் தனது மகள் தற்கொலை செய்துகொண்டார் என லாவண்யாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சதீஷ் குமார் அவரது பெற்றோர் கோட்டைச்சாமி, ராணி ஆகியோரைக் கைதுசெய்தனர். இது குறித்து உத்தமபாளையம் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுவருகிறார்.
இதையும் படிங்க: வரதட்சணை கொடுமையால் ஆசிரியை தற்கொலை! கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை!