தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் தேனி தொகுதியின் வேட்பாளர் சாகுல் அமீது மற்றும் பெரியகுளம் சட்டமன்ற (தனி) தொகுதி வேட்பாளர் ஷோபனா ஆகியோரின் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில துணை ஒருங்கினைப்பாளரும், இயக்குநருமான களஞ்சியம் பங்கேற்று வேட்பாளர்களை அறிமுகம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இக்கூட்டத்தில் பேசிய களஞ்சியம், "50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆண்ட இரு திராவிட கட்சிகளும், தமிழகத்தின் அனைத்து வளங்களையும், சுரண்டி பாலைவனமாக மற்றியுள்ளார்கள்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக, திமுக, அமமுக ஆகிய கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பளர்கள், தேர்தலில் வெற்றி பெற்று வந்த பின்னர் உங்கள் குறைகளை நேரில் வந்து கேட்பார்களா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், 6 மாதங்களுக்கு முன்பே தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் திராவிட கட்சிகள் பணத்தை பதுக்கி வைத்துவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், பணம் கொடுக்காமல் தமிழகத்தில் திராவிட கட்சிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார்களா? என்றும் விமர்சித்துள்ளார்.