ETV Bharat / state

காற்றாலைகளில் மின்சார உற்பத்தி உயர்வு!

தேனி: ஆண்டிப்பட்டி வட்டாரத்தில் காற்றின் வேகம் அதிகரித்ததால் காற்றாலைகளின் மூலம் வரும் மின்சார உற்பத்தி உயர்ந்துள்ளது என்று காற்றாலை பணியாளர்கள் கூறியுள்ளனர்.

wind mill
author img

By

Published : Jun 25, 2019, 9:11 PM IST

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, காமாட்சிபுரம், கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளில் மிக வேகமாக காற்று வீசி வருகிறது. வினாடிக்கு 12 மீட்டர் என்ற அளவில் காற்றின் வேகம் உள்ளது. இதனால், தேனி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளின் மின்சார உற்பத்தி கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.

தற்போது தேனி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில், ஒரு காற்றாலை மின் உற்பத்தி சராசரியாக 25 ஆயிரம் யூனிட்டாக அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆண்டிபட்டி பகுதியில் வீசும் காற்றின் வேகம் மிகவும் அதிகரித்து காணப்படுவதால் அந்த பகுதிகளில் செயல்படும் காற்றாலைகளில் மின்சார உற்பத்தி மேலும் அதிகரித்துள்ளது.

தொடர்ந்து தேனி மாவட்டத்தில் வீசும் காற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், மின்சார உற்பத்தி இன்னும் சில நாட்களில் உச்சக்கட்டத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகமாக காற்று வீசும் பட்சத்தில் ஒரு காற்றாலையில் அதிகபட்சமாக உற்பத்தி திறனை பொறுத்து நாளொன்றுக்கு 38 ஆயிரம் யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று காற்றாலை பணியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், அதிகமாக காற்று வீசியபோதும் மின்சாரத் தேவை குறைந்து காணப்படுவதால் நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரையில் காற்றாலைகளின் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்படுவதாக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Intro: தேனி மாவட்டத்தில் காற்றாலைகளில் மின்சார உற்பத்தி கிடுகிடு உயர்வு. ஆண்டிபட்டி வட்டாரத்தில் காற்றின் வேகம் அதிகரிப்பு.

Body: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து, தேனி மாவட்டத்தில் அதிகமாக காற்று வீசிவருகிறது. ஆண்டிபட்டி, காமாட்சிபுரம்,கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளில் மிக வேகமாக காற்று வீசிவருகிறது. வினாடிக்கு 12 மீட்டர் என்ற அளவில் காற்றின் வேகம் உள்ளது.வேகமாக காற்று வீசுவதால் தேனி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
தற்போது தேனி மாவட்டத்தில் உள்ள காற்றறைகளில் ஒரு காற்றாலை மின் உற்பத்தி சராசரியாக 25 ஆயிரம் யூனிட்டாக அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆண்டிபட்டி பகுதியில் வீசும் காற்றின் வேகம் மிகவும் அதிகரித்து காணப்படுவதால் அந்த பகுதிகளில் செயல்படும் காற்றாலைகளில் மின்சார உற்பத்தி மேலும் அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து தேனி மாவட்டத்தில் வீசும் காற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், மின்சார உற்பத்தி இன்னும் சில நாட்களில் உச்சக்கட்டத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகமாக காற்று வீசும் பட்சத்தில் ஒரு காற்றாலையில் அதிகபட்சமாக நான் உற்பத்தி திறனை பொறுத்து நாளொன்றுக்கு 38 ஆயிரம் யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

Conclusion: அதிகமாக காற்று வீசியபோதும் மின்சாரத் தேவை குறைந்து காணப்படுவதால் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரையில் காற்றாலைகளில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்படுவதாக காற்றாலை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.