ETV Bharat / state

தேனியில் 18ஆம் கால்வாய் நீட்டிப்புப் பகுதிகளில் நீர் திறப்பு! - Dam Opening

தேனி மாவட்டத்தில் 18ஆம் கால்வாய் நீட்டிப்புப் பகுதிகளில் நீர் திறப்பை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் திறந்துவைத்தார்.

தேனி 18ம் கால்வாய் நீட்டிப்பு பகுதிகளில் நீர் திறப்பு

author img

By

Published : Nov 11, 2022, 6:39 PM IST

தேனி மாவட்டம், கூடலூர் வைரவன் ஆற்றில் தொடங்கி தேவாரம் சுத்த கங்கை ஓடை வரை, 40.8 கி.மீ., தூரத்துக்கு 18-ம் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் மூலம் சுமார் 44 குளங்களும் நிரம்பும். இந்த குளங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில் இன்று தேனி மாவட்டம் போடி - தேவாரம் அருகே மூணாண்டிபட்டியில் உள்ள 18-ம் கால்வாயின் மூலம் 4794.70 ஏக்கர் பாசன நிலங்களுக்குப் பாசன வசதி அளிக்க தமிழ்நாடு அரசு உத்தரவின்பேரில் உத்தமபாளையம் வட்டம் கிராம பகுதிகளான தேவாரம், பொட்டிபுரம் மற்றும் போடி தாலூகா கிராம பகுதிகளான இராசிங்காபுரம், சிலமலை, மேலச்சொக்கநாதபுரம், போடிநாயக்கனூர் ஆகிய 6 கிராமங்கள் பயன் பெறும் வகையில் இன்று (நவ.11) முதல் 15 நாட்களுக்கு வினாடிக்கு 95 கன அடி வீதம் 121 மில்லியன் கன அடி தண்ணீரை தேவாரம் சுத்த கங்கை ஓடையில் இருந்து, மதகுகள் வழியாக தண்ணீரைத் திறந்து விடும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மதகுகளை திறந்துவைத்தார். பின்னர் மதகுகள் வழியாக வந்த தண்ணீரை மலர்த்தூவி வரவேற்றனர்.

உத்தமபாளையம் வட்டம், போடி தாலுகா பகுதிகள் பயன்பெறும் வகையில் 18-ம் கால்வாய் நீட்டிப்புப் பகுதிகளுக்கு 95 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இப்பகுதி விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் புதிதாக 4 வழக்குகளில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.