ETV Bharat / state

ஏ..! தள்ளு தள்ளு தள்ளு.. தேனி அரசு ஆம்புலன்ஸ்க்கு வந்த சோதனை!

தேனி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் நோயாளிகளை ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸ் வாகனம் பழுதடைந்ததால் அதனை தள்ளிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸை தள்ளி செல்லும் வைரல் வீடியோ

author img

By

Published : Nov 19, 2022, 4:15 PM IST

தேனி: பெரியகுளத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 100 ஆண்டுகளை கடந்து மக்களுக்கு மருத்துவ சேவையாற்றி வருகிறது. இந்த மருத்துவமனையில் உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் என நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த மருத்துவமனையில் நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக ஏற்றிச் செல்ல அவசர ஆம்புலன்ஸ் வாகனங்கள் இரண்டு உள்ளன. அவற்றில் ஒரு வாகனம் மருத்துவமனைக்குள்ளையே பழுதடைந்து, அதனை இயக்குவதற்காக மருத்துவமனை ஊழியர்கள் தள்ளி செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை பலரும் ஷேர் செய்து, ’நோயாளிகளுக்கு அவசரத்திற்கு உதவும் வாகனமா அல்லது நோயாளிகளே இறங்கி தள்ளிச் செல்லும் வாகனமா’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸை தள்ளி செல்லும் வைரல் வீடியோ

அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனத்தை தள்ளி செல்லும் நிலைமை குறித்து பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் குமாரிடம் கேட்டபோது, ”மருத்துவமனையில் அவசர உதவிக்காக வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் வாகனம் பழுதானது. ஆகையால், வாகனத்தின் பழுதை நீக்கம் செய்வதற்காக, வாகனத்தை எடுத்துச் சென்ற பொழுது அதனை தள்ளிச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனை தான் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இரண்டு தினங்களுக்குள் ஆம்புலன்ஸ் வாகனம் பழுது நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட உள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'ஆக்கிரமிப்பை எடுத்தால் தலை இருக்காது' - விஏஓவுக்கு மிரட்டல் விடுத்த வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.