தேனி: ஆண்டிப்பட்டி அருகே ஒக்கரைப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. ஒக்கரைப்பட்டி கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக வீர அழகம்மாள் என்பவரும் பஞ்சாயத்து துணைத் தலைவராக மணிகண்டன் ரமேஷ் இருந்து வருகின்றனர். இந்நிலையில், பஞ்சாயத்து தலைவர் வீர அழகம்மாள் தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தில் பல லட்சங்கள் மோசடி செய்துள்ளதாகவும்,
100 நாட்கள் வேலை திட்டத்தில் கட்டாத படிக்கட்டுகளை கட்டியதாக ஊழல் செய்ததாகவும் இதைக் கண்டித்து பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி ஒக்கரைப்பட்டி கிராமத்து பஞ்சாயத்தின் துணைத் தலைவர் மணிகண்டன் ரமேஷ் கையில் பதாகைகள் ஏந்தியும்; காந்தி புகைப்படத்துடனும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்து தனி ஆளாக போராடி வருகிறார்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி ஒக்கரைப்பட்டி கிராமத்தில் உள்ள குளத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதையும் படிங்க: தீபம் ஏற்றுவதில் திமுக - ஓபிஎஸ் தரப்பு தகராறு தொடர்பாக ஆட்சியரிடம் மனு!