பிகில் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டில் பேசிய நடிகர் விஜய் தனது திரைப்படம் ரிலீஸ் அன்று ரசிகர்கள் யாரும் பிளக்ஸ், பேனர் வைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். அதன்படி சமீபத்தில் வெளியாகிய பிகில் திரைப்படத்திற்குக் பிளக்ஸ், பேனர்கள் வைப்பதை தவிர்த்து அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.
இந்நிலையில் பள்ளப்பட்டியைச் சேர்ந்த விவசாயி முனியாண்டி என்பவர் கொடுவிலார்பட்டி கூட்டுறவு வங்கியில் வாங்கியிருந்த கால்நடைகள் கடன் ரூ. 49,450 மற்றும் ஜெயமங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் என்பவர் ஜெயமங்கலம் கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர்க்கடன் ரூ.46 ஆயிரம் ஆகியவற்றை விஜய் ரசிகர்கள் செலுத்தினர்.
இதனையடுத்து வங்கிக் கடன் செலுத்திய ரசீதுகளை விவசாயிகளிடம் கொடுத்தனர். விஜய் மக்கள் இயக்கத்தினர் விவசாயிகளின் வங்கி கடன் தொகையை செலுத்தியது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் அதனை பிளக்ஸ் வைத்து விஜய் ரசிகர்கள் விளம்பரம் தேடிக்கொண்டனர்.
இதையும் படிங்க: அன்று ராகுல், இன்று விஜய் -மிரட்டி பார்க்கும் எடப்பாடி அரசு!