தேனி: பெரியகுளம் பகுதியிலுள்ள தனியார் கலைக் கல்லூரியில் தேனியைச் சேர்ந்த மாணவன் மூன்றாம் ஆண்டு பி.எஸ்.சி படித்து வருகிறார். இவரின் தந்தை உயிரிழந்த நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வந்தார்.
இந்த தகவலை அறிந்த தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவர் பாண்டி, மாணவன் படிக்கும் கல்லூரிக்கு நேரடியாக சென்றார். அங்கு, கல்லூரியின் முதல்வரை சந்தித்து மாணவனின் கல்விக் கட்டணத்தை தான் செலுத்துவதாகக் கூறி, மாணவன் கல்வி கட்டணத்தை செலுத்தினார்.
பின்னர் இந்த தகவல் மாணவனுக்கு தெரிவிக்கப்பட்டது. தனக்கே தெரியாமல் தன் ஏழ்மையை புரிந்து கொண்டு விஜய் மக்கள் இயக்கத்தினால் தன்னுடைய கல்வி கட்டணத்தை செலுத்திய சம்பவம் மாணவனுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் ரஜினியின் மற்றொரு படம்!