தேனி மாவட்டம் பெரியகுளம் நகரின் மையப்பகுதியில் ஓடும் வராக நதியில் கட்டடக் கழிவுகள், சாக்கடை நீர் கலந்து முழுவதும் மாசு அடைந்து காணப்பட்டது. இதனால் வராக நதியை தூர்வார வேண்டும் எனப் பெரியகுளம் மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்தரநாத்தின் முயற்சியால் வராக நதியை காப்போம் என்ற குழு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அந்த குழு வராக நதியை முழுமையாக தூர்வாரியது.
கடந்த சில நாள்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று (நவ. 02) இரவு முதல் வராக நதி ஆற்றில் நீர் வரத்து தொடங்கியது. மாசு அடைந்து காணப்பட்ட வராக நதியை தூர்வாரியதால் தங்கு தடையின்றி மழைநீர் செல்கிறது.
இதனால் பெரியகுளம் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மழைநீர் வடிகால் வாய்க்கால் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு