இது குறித்து விவசாய சங்கத்தினர் கூறுகையில், "71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையில் சுமார் 20அடிக்கு மேல் வண்டல்மண் படிந்துள்ளதால், 50 அடி மட்டுமே தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த அணை கட்டப்பட்டு கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாகியும், இதுவரை தூர்வாரப்படவில்லை.
மூன்று முறை தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு, அணையை பார்வையிட்டு தூர்வாருவது தொடர்பான அறிக்கை, செலவாகும் பட்ஜெட் குறித்து பொதுப்பணித் துறை உயர் அலுவலர்களுடன் விவாதித்தும் எந்த வேலையும் நடக்கவில்லை.
தற்போது நடைபெற்று வரும் மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட் மீதான மானியக் கோரிக்கை கூட்டத்தொடரில் இதற்கான நிதியை ஒதுக்கி ஐந்து மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் வைகை அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அணையை தூர்வாருவதால் கிடைக்கும் வண்டல் மண்ணை விவாசயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும்" என்றனர்.