ETV Bharat / state

'தற்போது இருப்பது அண்ணா திமுக இல்லை; அடிமை திமுக' - உதயநிதி - முதலமைச்சர் பழனிசாமியை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

தேனி: 'சசிகலாவின் காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை எடப்பாடி பெற்றார் எனக் கூறியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது. தற்போது இருப்பது அண்ணா திமுக இல்லை; அடிமை திமுக' என சின்னமனூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

udhaynidhi stalin election campaign
உதயநிதி ஸ்டாலின் பேச்சு
author img

By

Published : Feb 10, 2021, 11:56 AM IST

தேனி மாவட்டத்தில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்று தேர்தல் பரப்புரையை திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மேற்கொண்டார்.

திமுக தேனி தெற்கு மாவட்டம் சார்பில் கம்பம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வேப்பம்பட்டி, சின்னமனூர், உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு, இறுதியாக கம்பம் நகரில் நிறைவுசெய்கிறார்.

சின்னமனூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்டபோது அவர் பேசியதாவது:

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் போட்டியிட்டு வெற்றிபெற்று முதலமைச்சராக அமர்ந்தது ஆண்டிபட்டி தொகுதி. இதனால் ஆண்டிபட்டியை அதிமுகவின் கோட்டை என்பார்கள். ஆனால் கடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆண்டிபட்டியில் திமுக வெற்றிபெற்றது.

மோடியின் அடிமை திமுக

தற்போது இருப்பது அண்ணா திமுக இல்லை, அடிமை திமுக. அதுவும் மோடியின் அடிமை திமுக.

மண்புழுபோல ஊர்ந்துசென்று சசிகலாவின் காலில் விழுந்து முதலமைச்சர் பதவி பெற்றவர் எடப்பாடி பழனிசாமி. இது குறித்து தொலைக்காட்சி, மொபைல் போன்களில் வந்த தகவலின்படிதான் நான் கூறினேன்.

சசிகலா குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என உதயநிதி பேச்சு

அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்கள். நான் பொய் ஏதும் சொல்லவில்லை. கருணாநிதியின் பேரன் நான், யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது.

தற்போது அதிமுக ஆட்சி வெற்றி நடைபோடுகிறது என விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் உண்மையில் சசிகலாவின் டேபிள், சேருக்கு அடியில்தான் வெற்றி நடைபோடுகிறது.

நாங்கள் எல்லாம் ஒரு தாயின் சகோதரர்கள், எப்போதும் கூடிக்கொள்வோம் என அமைச்சர் வேலுமணி இன்று கூறுகிறார். இதைத்தான் நான் இரண்டு மாதங்களுக்கு முன் இருந்தே கூறிவருகிறேன்.

சிறையில் இருந்து சசிகலா வந்ததும் நீங்கள் அனைவரும் அவரது காலில் விழுந்து சேர்ந்துவிடுவீர்கள் என்று கூறியதை, அமைச்சர் இன்று கூறியிருக்கிறார்.

சசிகலா வந்தவுடன் ஒன்றுசேருவோம் என்பதே அமைச்சரே ஒப்புக்கொண்டார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது உறவினருக்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கான டெண்டரை வழங்கியுள்ளார். முதலமைச்சர், துணை முதலமைச்சர் என இருவரும் லஞ்சம் வாங்கிக் கொண்டு சொத்து சேர்த்துள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'யாரும் யாருக்கும் அடிமை இல்லை'- உறுதியேற்ற ஓபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.