ETV Bharat / state

‘ஓபிஎஸ்ஸுக்கு தண்டனை கொடுக்க திமுகவை வெற்றிபெறச் செய்யுங்கள்’ - உதயநிதி - உதயநிதி பேச்சு

தேனி: ஓ. பன்னீர்செல்வத்திற்கு தண்டனை கொடுக்க திமுகவை வெற்றிபெறச் செய்யுமாறு பரப்புரையின்போது திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி கேட்டுக்கொண்டார்.

பரப்புரையில் ஈடுபட்ட உதயநிதி
பரப்புரையில் ஈடுபட்ட உதயநிதி
author img

By

Published : Feb 11, 2021, 12:22 PM IST

தேனி: 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேனி மாவட்டத்தில் இரண்டு நாள்களாகத் தேர்தல் பரப்புரை செய்துவருகிறார். இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் பரப்புரை செய்வதற்காக உதயநிதி ஸ்டாலின் வருகைதந்தார்.

அவரை வரவேற்க காத்திருந்த திமுகவினர், உதயநிதி ஸ்டாலின் வந்ததும், திடீரென தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத்தின் அலுவலகம் முன்பாக சாலையில் அமர்ந்தனர். மேலும் ரவீந்திரநாத்துக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அப்போது திமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் கூறுகையில், "குடியுரிமை, வேளாண் சட்ட மசோதாக்களுக்கு வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் மட்டுமே. எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின், "இஸ்லாமியர்களுக்கு எதிரானது குடியுரிமை சட்ட திருத்த மசோதா, விவசாயிகளுக்கு எதிரானது மூன்று புதிய வேளாண் சட்டம். இந்த இரண்டு சட்ட மசோதாக்களையும் திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்தவர் ஓ.பி. ரவீந்திரநாத் ஒருவர் மட்டுமே.

எனவே அவருக்கு கண்டனம் தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற தேனி மக்களின் கோரிக்கையை ஏற்கிறேன்" எனக் கூறினார். இதையடுத்து சாலையில் அமர்ந்தவர்கள் கலைந்துசென்றனர்.

அதனைத் தொடர்ந்து பெரியகுளம் காந்தி சிலை அருகே பேசிய உதயநிதி ஸ்டாலின், "பெரியகுளத்தில் ஒரு சாதாரண தேநீர்க்கடை வைத்திருந்த ஓபிஎஸ் இன்று பல்லாயிரம் கோடிகளில் சொத்து சேர்த்துவைத்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் சொத்து வாங்க இடம் இல்லை என்று கேரளாவில் அண்மையில் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கியிருப்பதாக அங்குள்ள முன்னணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

இது தவிர அவரது மகனான தேனி எம்.பி. ஓ.பி. ரவீந்திரநாத் ஊழல்செய்த பணத்தை பதுக்குவதற்காக தனி விமானத்தில் உலகம் சுற்றும் வாலிபனாக மொரீசியஸ், மாலத்தீவு நாடுகளுக்குப் பயணம்செய்தார். ஓபிஎஸ்ஸின் சகோதரர் ஓ. ராஜா மணல் கொள்ளை, ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து செய்துவருகிறார். மதுரையில் இருந்த ஆவின் நிறுவனத்தை இவருக்காக தனியாகப் பிரித்து தேனிக்கு மாற்றினார்கள்.

பரப்புரையில் ஈடுபட்ட உதயநிதி

அதற்காக நியமிக்கப்பட்ட 20 பணியிடங்களுக்கும் தலா ரூ.50 லட்சம் லஞ்சமாகப் பெற்றுள்ளனர். இதனை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து திமுகதான் நிறுத்திவைத்திருக்கிறது" என்றார்.

எனவே இவர்களுக்கு எல்லாம் தண்டனை கொடுப்பதற்கு வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் ஓபிஎஸ், அவரது குடும்பத்தினர் சொத்துகளை எல்லாம் மீட்டு பொதுமக்களிடம் ஒப்படைப்பதாக உதயநிதி தேர்தல் வாக்குறுதி அளித்தார்.

இதையும் படிங்க: ஓ. பன்னீர்செல்வத்தின் சொத்துக்களை மீட்டு மக்களிடம் கொடுப்போம்- உதயநிதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.