தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 10ஆம் தேதி தொடங்கியது. வரும் மே 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனிடையே தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று (மே 15) தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் முளைப்பாரி எடுத்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். குறிப்பாக தேனியில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரமுள்ள கோயிலுக்கு ஊர்வலமாக நடந்து சென்று நேர்த்திகடனை செலுத்தினர். கடந்த 16 ஆண்டுகளாக 3 மாவட்டங்களைச் சேர்ந்த திருநங்கைகள் ஒன்று கூடி அம்மனுக்கு நேர்த்திகடனை செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதையும் படிங்க: ’வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்’ : மாவட்ட ஆட்சியர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்