ETV Bharat / state

அணையில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி - DEAD FOUND

தேனி : சின்னமனூர் மகாராஜா மெட்டு அணையில் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அணையில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி
author img

By

Published : May 14, 2019, 7:58 AM IST

மதுரை எஸ்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் ரோஹித் சஞ்சய் (21). பொறியியல் கல்லூரி மாணவரான இவர், தனது நண்பர்களுடன் நேற்றுமுன்தினம் மேகமலை பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இரவங்கலாறு அருகே உள்ள மகாராஜா மெட்டு அணையில் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற ரோஹித் சஞ்சய், திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதைப் பார்த்து பதறிய நண்பர்கள், அவரை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால், முடியவில்லை. இதையடுத்து இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அணையில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி

சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த ஹைவேவிஸ் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினரும் மாணவரை மீட்கும் பணியில் இறங்கினர். நேற்றுமுன்தினம் மாலையில் மழை பெய்ததாலும், நீரின் குளிர்ச்சித் தன்மையாலும், மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டது. மீண்டும் நேற்று காலை உடலை தேடும் பணியில் காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் ஈடுபட்டனர். பல மணிநேரம் போராட்டத்துக்கு பிறகு கல்லூரி மாணவரின் உடலை மீட்டனர். பின்னர் உடற்கூறாய்விற்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஹைவேவிஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சுப.பழனிக்குமார் - தேனி.       13.05.2019.

     சின்னமனூர் அருகே மகாராஜா மெட்டு அணையில் மூழ்கிய கல்லூரி மாணவன் பலி. 
     தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலைக்கு  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து  தற்போது சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில்  மதுரை எஸ் எஸ் புரத்தைச் சேர்ந்த  ரோஹித் சஞ்சய் 
 (21) என்ற பொறியியல் கல்லூரி மாணவர் தனது நண்பர்களுடன் நேற்று மேகமலை பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
இரவங்கலாறு அருகே உள்ள  மகாராஜா மெட்டு அணையில்  தனது நண்பர்களுடன்  போட்டி போட்டுக்கொண்டு அணையின் ஒரு பகுதியிலிருந்து  மற்றொரு பகுதிக்கு  நீந்தி சென்றதாகத் தெரிகிறது.
      இதனை அடுத்து  அணையின் நடுப் பகுதிக்கு சென்றவுடன்  திடீரென நீரில் மூழ்கியதாக ரோகித் சஞ்சயின் நண்பர்கள்  போலீஸாருக்கு  தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த  ஹைவேவிஸ் போலீசார், உத்தமபாளையம்  தீயணைப்பு துறையினருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலையில் மழை பெய்ததாலும், நீரின் குளிர்ச்சித் தன்மையாலும், மீட்பு பணியில்
தாமதம் ஏற்பட்டது.
    இதனைத்தொடர்ந்து   இன்று காலை மீண்டும் ரோஹித் சஞ்சயின் உடலை  தேடும் பணியில் ஹைவேவிஸ் போலீசாரும், தீயணைப்புத் துறையினரும்
 ஈடுபட்டு வந்தனர். இதன் பின்னர் இன்று மதியம் இறந்தவர் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக 
சின்னமனூர் அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது குறித்து ஹைவேவிஸ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Visual sent FTP.
Slug Name As:
1)TN_TNI_04_13_MEGAMAMALAI DEAD BODY RECOVER_VIS_7204333.mp4

Thanks & Regards,

Suba.Palanikumar

E TV Bharat
District Reporter - Theni .
Mobile : 6309994707
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.