தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யாவிடம் சிபிசிஐடி மேற்கொண்ட விசாரணையில் மேலும் சில மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக்கல்லூரியில் படித்து வருவது தெரியவந்தது.
அதனடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில், சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த மாணவர் ராகுல், பாலாஜி மருத்துவக்கல்லூரியை சேர்ந்த பிரவின் மற்றும் சத்யசாய் மருத்துவக்கல்லூரியை சேர்ந்த அபிராமி ஆகியோர் என தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சென்னை சத்யசாய் மருத்துவக்கல்லூரி மாணவி அபிராமி, தந்தை மாதவனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவி முறையாக நீட் தேர்வு எழுதியதும் ஹால்டிக்கெட்டில் உள்ள புகைப்படம் உன்மையானது தான் எனவும் தடய அறிவியல் ஆய்வில் தெரியவந்தது.
மேலும், அபிராமியின் தந்தை உடல்நிலை சரியில்லாமல் தொடர்சிகிச்சை பெற்று வருவதால் அவரிடம் விசாரணை நடத்துவதில் சில சிக்கல்கள் உள்ளது அதனைத்தொடர்ந்து, அவர்ககளிருவரையும் சிபிசிஐடி போலீசார் விடுவித்துள்ளனர். தொடர்ந்து இது சம்பந்தமாக சந்தேகம் ஏதும் எழுந்தால் அவர்களிடம் மீண்டும் விசாரிக்கப்படும் என தெரியவருகிறது.