ETV Bharat / state

வாழ்த்து கூற வந்தவர்களுக்கு மாஸ்க், சானிடைசர் - விழிப்புணர்வு ஏற்படுத்திய மணமக்கள்

தேனி: திருமணத்திற்கு வாழ்த்துத் தெரிவிக்க வந்தவர்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்டவற்றை மணமக்கள் வழங்கி கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

theni
theni
author img

By

Published : Jun 3, 2020, 8:44 PM IST

தேனியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கோவையிலுள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். இவருக்கும், துமிதா என்ற பெண்ணுக்கும் கடந்த வருடம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இன்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி ஊரடங்கு காரணமாக தேனியில் உள்ள பெத்தாட்சி விநாயகர் கோயிலில் குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்களுடன், இவர்களது திருமணம் எளிமையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மணமகனின் வீட்டில் உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது வாழ்த்து தெரிவிக்க வந்த உறவினர்கள், நண்பர்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி ஆகியவற்றையும், ஐந்து கிலோ அரிசி, காய்கறி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களையும் மணமக்கள் வழங்கி, ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.

வாழ்த்து கூற வந்தவர்களுக்கு அன்பளிப்பு கொடுத்த மணமக்கள்

இது குறித்து மணமக்கள் கூறுகையில், ”வழக்கமாக, திருமணத்திற்கு வருபவர்களுக்கு தாம்பூல பை கொடுப்பது வழக்கம். ஆனால், கரோனா நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அனைவருக்கும் அத்தியாவசியமான கிருமிநாசினி, முகக்கவசம் ஆகியவற்றைக் கொடுக்கலாம் என திட்டமிட்டு, இதனை நாங்கள் வழங்கினோம். தாம்பூல பை கொடுக்க ஆகும் செலவைவிட இதற்கான செலவு குறைவுதான்” என்றனர் மகிழ்ச்சியுடன்.

இதையும் படிங்க:நோ இ-பாஸ்: மாநில எல்லையில் நடந்த சுவாரஸ்ய திருமணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.