ETV Bharat / state

ஆறுதல் கடிதம் அனுப்பிய மாணவனுக்குப் பதிலளித்த இஸ்ரோ சிவன்!

தேனி: சந்திரயான் - 2 தோல்விக்கு ஆறுதல் கடிதம் எழுதிய மாணவனுக்கு இஸ்ரோ சிவன் பதிலளித்து கடிதம் எழுதியுள்ளார்.

Theni School student wrote a consolation letter to ISRO Shivan and he writes back
author img

By

Published : Oct 22, 2019, 10:13 PM IST

2008ஆம் ஆண்டு சந்திரயான் - 1 விண்கலத்தை நிலவிற்கு அனுப்பி இந்தியா கனிமங்கள் குறித்து ஆய்வு செய்தது. இந்தியா விண்வெளி ஆய்வில் தனது அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணித்த நேரம் அது. ஆம் பத்து ஆண்டாக ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான்- 2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் பிஎஸ்எல்வி மார்க் -3 ராக்கெட் மூலம் விண்ணை நோக்கிப் பயணித்தது. இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்யாத நிலவின் தென்துருவத்தில் இந்தியா தனது ஆய்வுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டது.

இந்த நிகழ்வை உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கு வேளையில், நிலவை ஆய்வு செய்ய அனுப்பிய விக்ரம் என்ற லேண்டர் செப்டம்பர் ஏழாம் தேதி நிலவின் மேற்பரப்பை தொடுவதற்கு சுமார் 2 கி.மீ. தொலைவிலிருந்தபோது விஞ்ஞானிகள் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்நிகழ்வினால் ஒட்டுமொத்த நாடும் சோகமடைந்தது.

மாணவன் தாழைஅரசன்

சந்திரயான்-2 தோல்வியால் வருத்தமடைந்த இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர்விட்டார். அதைப் பார்த்த தேனி பாரஸ்ட் ரோடு 4ஆவது தெருவைச் சேர்ந்த ராஜவேல் - பாமாதேவி தம்பதியினரின் மகன் தாழைஅரசன் (14). தேனி என்.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவரும் இவர், கடந்த செப்டம்பர் 28இல் இஸ்ரோ தலைவர் சிவனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,

"ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில், சிறு வயதிலிருந்தே நான் நினைத்தது எதுவும் நடக்கவில்லை!
ஒவ்வொரு முறையும் நான் ஆசைப்படுவது நிராகரிக்கப்படும்!
அதை ஏற்றுக் கொள்வேன்! எல்லாம் நன்மைக்கே! என்று சொல்வது போல் முடிவு சிறப்பாக அமையும்! எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். அதுபோல் விக்ரம் லேண்டர் பிரச்சினைக்காகக் கவலைப் படாதீர்கள்!

நீங்கள் சிவன்! உங்கள் தலை மீது சந்திரன் உள்ளான்!
அதனால் அடுத்தத் திட்டத்தில் வெற்றி வசமாகும்!
"
எனக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மாணவன் எழுதிய கடிதம்
மாணவன் எழுதிய கடிதம்

இதைப் படித்த சிவன்,
"உன் அன்பு கருத்திற்கு மிக்க நன்றி!
சந்திரயான்-2 திட்டத்தைத் தொடர்ந்து கவனித்து அதைப் பற்றி நன்றாக எழுதி இருக்கிறாய்!
சந்திரயான்-2 பற்றி நீ சேகரித்த செய்திகளை எனக்கு அனுப்பியதற்கு நன்றி!
சந்திரயான்-2 லேண்டர் வெற்றிகரமாகத் தரை இறங்காமல், இருந்தாலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது!
சந்திரயான்-2 சுற்றுகலன் (ஆர்பிட்டர்) அதனுடைய கருவிகள் மூலம் அறிவியல் ரீதியான தகவல்களை ஒரு வருட காலத்தை, தாண்டி ஏழு வருட காலத்திற்கு அனுப்பும்! இஸ்ரோவின் வருங்கால திட்டங்கள் வெற்றிபெற உன் வாழ்த்துகளைப் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்!
" என மாணவனுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இஸ்ரோ சிவன் எழுதிய கடிதம்
இஸ்ரோ சிவன் எழுதிய கடிதம்

மாணவனின் இச்செயலுக்குப் பள்ளி ஆசிரியர்கள், உறவினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் உள்பட அனைவரும் பாராட்டிவருகின்றனர்.

Intro: நீங்கள் சிவன்.! உங்கள் தலை மீது சந்திரன் உள்ளான்.! அதனால் அடுத்த திட்டத்தில் வெற்றி வசமாகும்.!
சந்திராயன் - 2 தோல்வியால் கதறி அழுத இஸ்ரோ தலைவர் சிவனுக்கு ஆறுதல் கடிதம் அனுப்பிய தேனி மாணவன்..!
இஸ்ரோவின் வருங்கால திட்டங்கள் வெற்றி பெற உன் வாழ்த்துக்களை பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.! என மாணவனுக்கு பதில் கடிதம் எழுதிய இஸ்ரோ தலைவர் சிவன்..!
சந்திராயன் - 2 வின்கலத்தில் விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிப்பால் கதறி அழுத இஸ்ரோ தலைவர் சிவனுக்கு ஆறுதல் கடிதம் எழுதிய தேனி பள்ளி மாணவன் குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு நமது ஈடிவி பாரத் செய்திகளுக்காக..

Body: "சந்திராயன்-2" நிலவை நோக்கி இந்தியாவின் வரலாற்று பயணம்.! இந்தியா தனது வின்வெளி ஆய்வில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்த பாதை இது. ஏற்கெனவே 2008ல் சந்திராயன் - 1 விண்கலத்தை நிலவிற்கு அனுப்பி, கனிமங்கள் குறித்து இந்திய ஆய்வு செய்தது. மேலும் நிலவில் நீர் இருப்பதையும் அந்த ஆய்வில் கண்டறிந்தது. 312 நாட்கள் ஆய்வை மேற்கொண்ட அந்த விண்கலம், 2009 ஆகஸ்ட் மாதத்துடன் தனது ஆயுள் காலத்தை நிறைவு செய்தது.
இதனை தொடர்ந்து நிலவிற்கு மீண்டும் விண்கலத்தை அனுப்ப இந்தியா திட்டமிட்டு, கடந்த 10 ஆண்டுகளாக உருவாக்கியதுதான் சந்திராயன்- 2 விண்கலம். சுமார் 1000 கோடி திட்ட மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலத்தை பி.எஸ்.எல்.வி மார்க் -3 ராக்கெட் மூலம் 2019 கடந்த ஜூலை 22ம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டது. முதன்முறையாக ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய மூன்று கருவிகளும் ஒரே நேரத்தில் விண்ணிற்கு அனுப்பி, இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்யாத நிலவின் தென்துருவத்தில் இந்தியா தனது ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிட்டது.
உலகமே உற்று நோக்கிய இந்த வரலாற்றுப் பயணம் தோல்வியில் முடிந்தது. நிலவை ஆய்வு செய்ய அனுப்பிய விக்ரம் என்ற லேண்டர் செப்டம்பர் ஏழாம் தேதி நிலவின் மேற்பரப்பை தொடுவதற்கு சுமார் 2 கி.மீ தொலைவில் இருந்த போது விஞ்ஞானிகள் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. துரதிஷ்டவசமாக ஏற்பட்டு இந்நிகழ்வினால் ஒட்டுமொத்த இந்தியாவும் சோகமடைந்தது.
சந்திராயன்-2 தோல்வியால் வருத்தமடைந்த இஸ்ரோ தலைவர் மற்றும் விஞ்ஞானிகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஆறுதல் கூறினார்கள். பாரதப் பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த சமயத்தில், விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு தோல்வி அடைந்ததை எண்ணி, இஸ்ரோ தலைவர் சிவன் குழந்தையைப்போல கதறி அழுதார். அவரை ஆரத்தழுவி கட்டியணைத்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி. இந்நிகழ்வு அனைவரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் கதறி அழுததை டிவியில் பார்த்த தேனி பள்ளி மாணவன் அவருக்கு ஆறுதல் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். தேனி பாரஸ்ட் ரோடு 4வது தெருவை சேர்ந்த ராஜவேல் - பாமாதேவி தம்பதியினரின் மகன் தாழைஅரசன் (14). தேனி என்.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் இவர், கடந்த செப்டம்பர் - 28ல் இஸ்ரோ தலைவர் சிவனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில், சிறு வயதில் இருந்தே நான் நினைத்தது எதுவும் நடக்கவில்லை.! ஒவ்வொரு முறையும் நான் ஆசைப்படுவது நிராகரிக்கப்படும்! அதை ஏற்றுக் கொள்வேன்! எல்லாம் நன்மைக்கே! என்று சொல்வது போல் முடிவு சிறப்பாக அமையும்! என குறிப்பிட்டிருந்தீர்கள். அதுபோல் விக்ரம் லேண்டர் பிரச்சினைக்காக கவலைப் படாதீர்கள்.! நீங்கள் சிவன்.! உங்கள் தலை மீது சந்திரன் உள்ளான்.! அதனால் அடுத்த திட்டத்தில் வெற்றி வசமாகும்.! என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதைப் படித்த இயக்குனர் சிவன், உன் அன்பு கருத்திற்கு மிக்க நன்றி.! சந்திராயன்-2 திட்டத்தை தொடர்ந்து கவனித்து அதைப் பற்றி நன்றாக எழுதி இருக்கிறாய்.! சந்திராயன்-2 பற்றி நீ சேகரித்த செய்திகளை எனக்கு அனுப்பியதற்கு நன்றி.! சந்திராயன்-2 லேண்டர் வெற்றிகரமாக தரை இறங்காமல், இருந்தாலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.! சந்திராயன்-2 ஆர்பிட்டர் அதனுடைய கருவிகள் மூலம் அறிவியல் ரீதியான தகவல்களை ஒரு வருட காலத்தை, தாண்டி ஏழு வருட காலத்திற்கு அனுப்பும்.! இஸ்ரோவின் வருங்கால திட்டங்கள் வெற்றி பெற உன் வாழ்த்துக்களை பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.! என இஸ்ரோ தலைவர் சிவன் மாணவனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதம் மாணவருக்கு அக்டோபர் 19ல்
கிடைத்தது.
மாணவனின் இச்செயலுக்கு பள்ளி ஆசிரியர்கள், உறவினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்பட அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
சிறுவயதிலிருந்தே பள்ளிகளில் நடைபெறும் கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளேன். அணு விஞ்ஞானி ஐயாஅப்துல் கலாம் அவர்கள் மீது கொண்ட அன்பால் தானும் ஒரு விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற கனவில் இருந்தேன். அவருக்குப் பிறகு இஸ்ரோ தலைவர் சிவன் மீதும் அதீத அன்பு கொண்டிருந்தேன். விக்ரம் லேண்டர் தகவல்தொடர்பு துண்டிப்பால் அவர் கதறி அழுததை பார்த்து நானும் அழுதேன். உடனே அவருக்கு ஆறுதல் கடிதம் எழுதி அனுப்பினேன். என் கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதி அனுப்பியது மகிழ்ச்சி அளிப்பதாக சிறுவன் தாழைஅரசன் தெரிவித்தார்.
இஸ்ரோ தலைவர் சிவன் அழுததற்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு நாட்டின் தலைவர்களும் ஆறுதல் தெரிவித்த வரிசையில், 9வகுப்பு மாணவன் அவருக்கு ஆறுதல் கூற வேண்டும் என கடிதம் எழுதியிருப்பது எங்கள் பள்ளிக்கு கிடைத்த பெருமையாக கருதுவதாக கூறுகிறார் தேனி என். எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்..

Conclusion: அப்துல்கலாமை போல் தானும் ஒரு விஞ்ஞானி ஆக வேண்டும் என்கிற மாணவன் தாழைஅரசனின் கனவு மெய்ப்பட வேண்டும் என்பதே அனைவரின் ஆவலாக உள்ளது.

பேட்டி : 1) தாழைஅரசன் ( மாணவன்)
2) பாமாதேவி ( பெற்றோர்)
3) ராமநாதன் (தலைமை ஆசிரியர், என்.எஸ்.ஆண்கள் மேல்நிலை பள்ளி, தேனி.)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.