ETV Bharat / state

பட்ஜெட் 2020: பொதுமக்கள் கருத்து

தேனி: 2020 -21ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்த நிலையில் அது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

author img

By

Published : Feb 2, 2020, 12:11 PM IST

#Theni #Union Budget 2020 Union Budget 2020 Public Review Union Budget 2020 Public Reaction Theni People Union Budget 2020 Reaction தேனி மக்கள் யூனியன் பட்ஜெட் 2020 கருத்து யூனியன் பட்ஜெட் 2020 பொதுமக்கள் கருத்து
Theni People Union Budget 2020 Reaction

2020-21ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்தார். இது அவர் தாக்கல்செய்யும் இரண்டாவது மத்திய நிதிநிலை அறிக்கை ஆகும்.

அதில், "இந்தியப் பொருளாதாரத்திற்கான அடித்தளம் மிகவும் வலுவாக உள்ளது. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் மக்களின் வருமானம், பணப்புழக்கம், நுகர்வுத்திறன் ஆகியவை அதிகரிக்கும் நோக்கிலும், பெண்கள், சிறுபான்மையினரின் விருப்பத்தை நிறைவேற்றும்வகையிலும் இந்த நிதிநிலை அறிக்கை இருக்கும்” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். மேலும் துடிப்பான பொருளாதாரம் உருவாக்குவதே எங்களின் இலக்கு என்றார்.

இந்நிலையில், நேற்று தாக்கல்செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கை குறித்து தேனி மாவட்ட பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோரின் கருத்துகளைப் பார்க்கலாம்.

பயிற்சி பட்டய கணக்கர் (ஆடிட்டர்) மாணவர் அஜீத்

2020 - 21ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வருமானத்தில் ரூ.5 லட்சம் வரையில் வருமான வரி கிடையாது. ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரையில் 10 விழுக்காடு வரி செலுத்த வேண்டும்.

இந்தப் புதிய வரிவிதிப்பு கடந்தாண்டைவிட 10 விழுக்காடு குறைவாகும். இதன்மூலம் எல்.ஐ.சி. பிரீமியம், வீட்டுக்கடன் தவணை, குழந்தைகளின் பள்ளிக்கட்டணம் உள்ளிட்ட 80C-க்கான கழிவுகள் ரூ.1.50 லட்சம் வரையில் கழிக்கப்படும் செலவினங்கள் புதிய வரி விதிப்பில் கழிக்க முடியாது. புதிய வரி விதிப்பானது ரூ.20 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுபவர்களுக்குத்தான் சாதகமாக அமையும்.

பயிற்சி பட்டய கணக்கர் மாணவி தமிழ்செல்வி

சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்களுக்கான வருமான வரம்பு ரூ.2 கோடியிலிருந்து 5 கோடி வரை உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும்.

யோகராஜ்

ஜி.எஸ்.டி.யால் பொதுமக்களின் குடும்பச் செலவு நான்கு விழுக்காடு குறைந்திருக்கிறது. சேமிப்பு அதிகரித்திருக்கிறது என்று கூறினார். ஆனால் நடைமுறையில் அத்தியாவசியப் பொருள்களான பால், சிலிண்டர், பேருந்து கட்டணம் உள்ளிட்டவைகளின் விலை அதிகரித்தே காணப்படுகிறது.

நிதியமைச்சர் கூறியதுபோல் பொதுமக்களின் செலவு எவ்வாறு குறையும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

2020 பட்ஜெட் குறித்து கருத்து தெரிவிக்கும் பொதுமக்கள், விவசாயிகள்

ரயில் பாதை போராட்டக்குழுத் தலைவர் சங்கரநாரயணன்

தேனி, திண்டுக்கல், இடுக்கி மாவட்ட மக்கள் பயன்பெறும்வகையில் திண்டுக்கல் - குமுளி அகல ரயில்பாதைத் திட்டம் உள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த ரயில் திட்டத்திற்கு போராட்டம் நடத்தியும், மத்திய ரயில்வே அமைச்சர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி எம்.பி. என முக்கிய நபர்களிடம் வலியுறுத்தியும் தற்போதைய 2020 - 21ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் வராதது ஏமாற்றமளிக்கிறது.

விவசாயி சீனிராஜ்

16 அம்ச திட்டங்கள், உரங்களை சமநிலைப்படுத்தி விலை நிர்ணயம் செய்வது, விவசாயிகளுக்கான கடன் நிதி ஒதுக்கீடு என்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும் நீர் மேலாண்மைக்கு இந்த மத்திய நிதிநிலை அறிக்கை சொல்லும்படியாக இல்லாததது வருத்தமளிக்கிறது. நீர் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டால்தான் வேளாண் சாகுபடி அதிகரிக்கும்.

அதன்மூலம் உணவு உற்பத்தி தன்னிறைவு அடையும். மேலும் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க தனியார் பண்ணை குடிசை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, விவசாய தரிசு நிலங்களில் சூரிய ஒளி மின்சக்தித் திட்டம் போன்றவைகளால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பயனடையும். இதனால் விவசாயிகளுக்கு எந்தவித பலனும் ஏற்படப்போவதில்லை.

வங்கி ஊழியர் கௌதம்

ஜவுளித் துறை, செல்போன், எரிசக்தி போன்ற துறை அளிக்கும் முக்கியத்துவம் அளிப்பதால் நாடு முன்னேற்றம் அடையாது. வேளாண்மையை பிரதானமாகக் கொண்ட இந்தியாவில் வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

வேளாண்மையை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் ஏதும் இந்த மத்திய நிதிநிலை அறிக்கையில் கிடையாது. ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால், 2020 -21ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான். ஏழை மேலும் ஏழையாகிறான் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

இதையும் படிங்க:

மிக நீண்ட பட்ஜெட் உரை அல்ல வெற்று உரை - ராகுல் காந்தி

Intro: 2020 -21ஆம் ஆட்டிற்கான மத்திய பட்ஜெட், தேனி மாவட்ட பொதுமக்கள், விவசாயிகளின் வரவேற்பும், ஏமாற்றமும்!!

Body: 2020 - 21ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை நாடாளுமன்றத்தில் தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்திய பொருளாதாரத்துக்கான அடித்தளம் மிகவும் வலுவாகவே உள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக் கவனம் செலுத்தப்படவுள்ளது. துடிப்பான பொருளாதாரத்தை உருவாக்குவதே எங்களின் இலக்கு. இந்த பட்ஜெட் மக்களின் வருமானம் மற்றும் பணப்பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கிலும், அவர்களின் நுகர்வுத் திறனை அதிகரிக்கும் நோக்கிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுபான்மையினர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் இந்த பட்ஜெட் இருக்கும் என்று அ
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்து தேனி மாவட்ட பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோரின் கருத்துக்களை பார்க்கலாம்.
1) அஜீத் : ஆடிட்டர் பயிற்சி மாணவர், தேனி.
2020 - 21ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமானத்தில் ரூ.5லட்சம் வரையில் வருமான வரி கிடையாது. ரூ.5லட்சம் முதல் ரூ.7.5லட்சம் வரையில் 10% வரி செலுத்த வேண்டும். இந்த புதிய வரிவிதிப்பு கடந்தாண்டை விட 10% குறைவாகும். இதன் மூலம் எல்.ஐ.சி பிரிமியம், வீட்டுக்கடன் தவனை மற்றும் குழந்தைகளின் பள்ளிக்கட்டணம் உள்ளிட்ட 80Cக்கான கழிவுகள் ரூ.1.50லட்சம் வரையில் கழிக்கப்படும் செலவினங்கள் புதிய வரி விதிப்பில் கழிக்க முடியாது. புதிய வரி விதிப்பானது ரூ.20லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமாணம் ஈட்டுபவர்களுக்குத் தான் சாதகமாக அமையும்.

2) தமிழ்செல்வி : ஆடிட்டர் பயிற்சி மாணவி, தேனி..
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான வருமான வரம்பு
ரூ.2கோடியில் இருந்து 5கோடி வரை உயரத்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும்.

3) யோகராஜ் : தேனி..
பட்ஜெட் உரையின் துவக்கத்தில் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டியால் பொதுமக்களின் குடும்ப செலவு 4%குறைந்திருப்பதாகவும் சேமிப்பு அதிகரித்திருப்பதாகவும் கூறினார். ஆனால் நடைமுறையில் அத்தியாவசிய பொருட்களான பால், சிலிண்டர், பேருந்து கட்டணம் உள்ளிட்டவைகளின் விலை அதிகரித்தே காணப்படுகிறது. நிதி அமைச்சர் கூறியது போல் பொதுமக்களின் செலவு எவ்வாறு குறையும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

4) சங்கரநாரயணன் : திண்டுக்கல் - குமுளி அகல ரயில் பாதை போராட்டக்குழுத் தலைவர்.
தேனி, திண்டுக்கல் மற்றும் கேரளாவின் இடுக்கி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் உள்ள திண்டுக்கல் - குமுளி அகல ரயில் பாதைத் திட்டம். ஆனால் கடந்த 10ஆண்டுகளாக இந்த ரயில் திட்டத்திற்கு போராட்டம் நடத்தியும், மத்திய ரயில்வே அமைச்சர், தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், தேனி எம்.பி என முக்கிய நபர்களிடம் வலியுறுத்தியும் தற்போதைய 2020 - 21ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வராதது ஏமாற்றமளிக்கிறது.

5) சீனிராஜ் : விவசாயி, பள்ளபட்டி.
16அம்ச திட்டம், உரங்களை சமநிலப்படுத்தி விலை நிர்ணயம் செய்வது, விவசாயிகளுக்கான கடன் நிதி ஒதுக்கீடு என்பது வரவேற்கத்தக்கதானலும், நீர் மேலாண்மைக்கு இந்த பட்ஜெட்டில் சொல்லும்படியாக இல்லாததது வருத்தமளிக்கிறது. நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டால் தான் வேளாண் சாகுபடி அதிகரிக்கும். அதன் மூலம் உணவு உற்பத்தி தன்னிறைவு அடையும். மேலும் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க தனியார் பன்னைக் குடிசை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு,விவசாய தரிசு நிலங்களில் சூரிய ஒளி மின்சக்தி திட்டம் போன்றவைகளால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பயனடையும். இதனால் விவசாயிகளுக்கு எந்தவித பலனும் ஏற்படப்போவதில்லை.

6) கௌதம் : வங்கி ஊழியர், தேனி.
ஜவுளித்துறை, செல்போன், எரிசக்தி போன்ற துறை அளிக்கும் முக்கியத்துவம் அளிப்பதானல் நாடு முன்னேற்றம் அடையாது. விவசாயத்தை பிரதானமாக கொண்ட இந்தியாவில் வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விவசாயத்தை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் ஏதும் இந்த பட்ஜெட்டில் கிடையாது.

Conclusion: ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால், 2020 -21ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டினால் பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான். ஏழை மேலும் ஏழையாகிறான் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.