ETV Bharat / state

சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினர் தொடர் தர்ணா போராட்டம்

author img

By

Published : Feb 13, 2020, 2:36 PM IST

தேனி: பெரியகுளத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினர் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

சிசிஏவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தர்ணா போராட்டம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கடந்த 50 நாள்களுக்கு மேலாக டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போரட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதி இஸ்லாமிய அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோர் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் சாலையில் அமரந்து செல்போன் விளக்குகளை (ஸ்டார்ச்) ஒளிரவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் டெல்லியைப் போன்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் பெரியகுளத்தில் உள்ள ரஹமத் மஸ்ஜித் பள்ளிவாசல் முன்பாக இஸ்லாமிய அமைப்பினர் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெறும் வரை தங்கள் போராட்டத்தைத் தொடரப்போவதாகவும், பெரியகுளம், தேனி உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் இருந்து இஸ்லாமியர்கள் கலந்துகொள்ள உள்ளதால் ஒரு ஏக்கர் பரப்பளவு உள்ள பள்ளிவாசல் வளாகத்தைத் தயார்செய்துவருகின்றனர். இஸ்லாமியர்களின் தொடர் தர்ணா போராட்டத்தால் பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க...பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்துவதாக ஐபிஎஸ் மனைவி மீது புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.