தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கம்பம் ஓடைக்கரைத் தெரு, காளியம்மன் கோயில் அருகில் உள்ள குடோன் ஒன்றில் சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்கள் பதுக்கிவைத்திருந்தது தெரிந்தது.
கம்பம் வேலப்பர்கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ் (54), ஓடைக்கரைத் தெருவைச் சேர்ந்த தாரீக் அகமது (36) ஆகியோர் சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது காவல்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
அதனை தொடரந்து கட்டுக்கட்டாக பதுக்கிவைத்திருந்த புகையிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் கைப்பற்றப்பட்ட புகையிலைப் பொருட்கள் சுமார் ரூ. 2 லட்சம் மதிப்புடையதாகும். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்க: இரு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தந்தை!