கரோனா பரவலால் நாடு முழுவதுமுள்ள மத வழிபாட்டு நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் நிகழ்வுக்காக நோன்பு கஞ்சி திறப்பும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு ஜமாஅத் உலமா சபையின் தேனி மாவட்ட நிர்வாகிகள் சார்பில், ரம்ஜான் நோன்பு கஞ்சி திறப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டுமென தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுதொடர்பாக மனுவில், "திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் சமூக இடைவெளியுடன் தெருக்களில் நோன்பு கஞ்சி காய்ச்சி விநியோகித்து வருகின்றனர். அதேபோன்று தேனி மாவட்டத்திலும் இஸ்லாமியர்கள் நோன்பு கஞ்சி விநியோகிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். பெருநாள் தொழுகைக்கும் அனுமதி வழங்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிறுமி கொலையில் என்ன நடந்தது? எஸ்.பி ஜெயக்குமார் பதில்!