தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் ஆண்டிபட்டி பகுதியில் ஆய்வுப்பணியினை முடித்துவிட்டு தேனியில் உள்ள தனது அலுவலகத்திற்கு காரில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் வந்த கார் தேனி அருகில் உள்ள குன்னூர் பகுதியில் உள்ள சோதனைச்சாவடியினை கடக்கும்போது விபத்தில் அடிபட்ட இருவர் அங்கு இருப்பதைக்கண்டு, காரை விட்டு இறங்கி உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் அளித்தார்.
ஆனால், ஆம்புலன்ஸ் வாகனம் உரிய நேரத்திற்கு வராததால் உடனடியாக அவர் வந்த அரசு வாகனத்தில் காயமடைந்த இருவரையும் ஏற்றி, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார். பின்னர் அவர் அங்கிருந்து வேறு வாகனத்தில் தனது அலுவலகம் வந்தார். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகப் பரவி வருகிறது.
இந்தக் காட்சிகளைப் பார்த்த பலரும் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரனுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திருநெல்வேலியில் ரயில் முன் பாய்ந்து பள்ளி மாணவன் தற்கொலை!