தேனி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இத்தொற்று நோயைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் உள்ளூர் அமைப்புகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், முகக்கவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடுவர்களிடம் இருந்து 100 ரூபாய் வசூலிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, காமராஜர் பேருந்து நிலையம், பொம்மையக்கவுண்டன்பட்டி, அரண்மனை புதூர் லிலக்கு உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்லும் பெண்கள், இளைஞர், முதியவர்கள் ஆகியோரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், அபராதத் தொகை செலுத்த தவறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : மதுபானக்கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்!