ETV Bharat / state

பண ஆசையால் ஒரு லட்சத்தை இழந்த இளைஞர் - போலீசார் விசாரணை! - ceating

தேனி: ஆண்டிபட்டி அருகே செல்போன் டவர் அமைக்க இடம் வழங்கினால் அதிக வாடகை தருவதாகக் கூறி இளைஞரிடம் ரூ.1.93 லட்சம் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார்
author img

By

Published : Jul 7, 2019, 10:59 PM IST

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் என்பவரது மகன் சதிஷ் (18). இவர் 12ஆம் வகுப்பு வரை படித்து விட்டு வேலை தேடி வருகிறார். இந்நிலையில் இவரது தொலைபேசி எண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைபேசி நிறுவனத்தில் இருந்து சிலர் பேசியுள்ளனர். அதில் சதீஷிற்கு சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைக்க இருப்பதாகக் கூறி முன்தொகையாக ரூ.80 லட்சம், மாதந்தோறும் வாடகையாக ரூ.45 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கான வாடகை ஓப்பந்த பத்திரம் போடுவதற்கு முன் பணம் செலுத்த வேண்டும் என கூறியதையடுத்து, அவர்கள் சொன்ன வங்கி கணக்கில் 6 தவணைகளாக ரூ.1.93 லட்சத்தை சதிஷ் செலுத்தியுள்ளார். இதன்பின்னர் அவர்களின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டதால் சந்தேகமடைந்த சதிஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த கடமலைக்குண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

கடமலைக்குண்டு காவல்துறையினர்

முதற்கட்ட விசாரணையில், சதிஷ் பணம் செலுத்திய வங்கி கணக்கு டில்லியைச் சேர்ந்த பாபு என்பவரின் பெயரில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் டவர் அமைக்கப்போவதாக கூறி நூதன முறையில் பணமோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நாளுக்கு நாள் மக்களிடையே அரசு தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பண ஆசையால் பொதுமக்கள் ஏமாறும் சம்பவங்கள் தொடர்கின்றன என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Intro: ஆண்டிபட்டி அருகே செல்பேன் டவர் அமைக்க இடம் வழங்கினால் அதிக வாடகை தருவதாக கூறி இளைஞரிடம் ரூ.1 லட்சத்து 93 ஆயிரம் மோசடி செய்து. காவல்துறையினர் விசாரணை.Body: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் என்பவரது மகன் சதீஸ் (18). இவர் 12ஆம் வகுப்பு வரை படித்து விட்டு வேலை தேடி வருகிறார். இந்நிலையில் இவரது தொலைபேசிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைபேசி நிறுவனத்தில் இருந்து மர்மநபர்கள் பேசியுள்ளனர். அதில் சதீஸிற்கு சொந்தமான இடத்தில் செல்லிடபேசி கோபுரம் அமைக்க இருப்பதாக கூறியுள்ளனர். அந்த இடத்திற்கு மாத மாதம் வாடகை தருவதாகவும் அதற்கு நிறுவனத்தின் சார்பில் சதீஸிற்கு முன்தொகையாக ரூபாய் 80 லட்சம் மற்றும் மாதந்தோறும் வாடகையாக ரூ.45 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் இதற்கான வாடகை ஓப்பந்த பத்திரம் போடுவதற்கு பணம் செலுத்த வேண்டும் என கூறியதையடுத்து, அவர்கள் சொன்ன வங்கி கணக்கில் 6 தவணைகளாக ரூபாய் 1 லட்சத்து 93 ஆயிரம் பணத்தை சதிஸ் செலுத்தியுள்ளார். இதன்பின்னர் அவர்களின் செல்லிடபேசி அணைத்து வைக்கப்பட்டதால் சந்தேகமடைந்த சதீஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கடமலைக்குண்டு காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சதீஸ் பணம் செலுத்திய வங்கி கணக்கு டில்லியைச் சேர்ந்த பாபு என்பவரின் பெயரில் இருப்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Conclusion: செல் போன் டவர் அமைக்கப்போவதாக கூறி நூதன முறையில் பண மோசடி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.