ETV Bharat / state

ஒரே நாளில் 4 இடங்களில் திருட்டு: பொதுமக்கள் அச்சம் - செயின் பறிப்பு

தேனி: போடி அருகே வங்கி ஏடிஎம், குடியிருப்பு, வழிப்பறி என ஒரே நாளில் 4 இடங்களில் திருட்டுச் சம்பவம் நடைபெற்றதையடுத்து பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஏடிஎம் மிஷின்
ஏடிஎம் மிஷின்
author img

By

Published : Oct 29, 2020, 6:30 PM IST

தேனி மாவட்டம் போடி - தேவாரம் சாலையில் அமைந்துள்ள சில்லமரத்துப்பட்டி கிராமத்தில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு, ஏடிஎம் மையத்தை திருட முயன்ற சம்பவம் நடந்தேறியுள்ளது.

சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த உதயகுமார் என்பவர் தன் நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள கலா பாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரி அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார்.

அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த உப்புக்கோட்டையைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர், உதயகுமார் கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் தங்க செயினை பறித்துச் சென்றுள்ளார்.

அப்பகுதியில் இருந்த காவல் துறையினர் பின்தொடர்ந்து சென்று வழிப்பறியில் ஈடுபட்டவரிடம் இருந்து செயினை மீட்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போடி தாலுகா காவல் துறையினர் சந்திரமோகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல சில்லமரத்துப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பின்புறம் வசித்து வருபவர் சிவக்குமார். கொத்தனார் வேலை செய்து வரும் இவர் மனைவியுடன் வெளியே சென்றுள்ளார்.

அப்போது வீட்டின் பூட்டை உடைத்த நபர்கள் பீரோவில் இருந்த 15 சவரன் தங்க நகையை திருடிச் சென்றுள்ளனர். இதேபோல அருகில் வசிக்கும் முருகேஸ்வரி என்பவரின் வீட்டை உடைத்தும் உள்ளே புகுந்தனர். பீரோவில் தங்க நகைகள் ஏதும் இல்லாததால் திருடு போகவில்லை.

இதனைத்தொடர்ந்து சில்லமரத்துப்பட்டி மெயின் ரோட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்தை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் திருட முயற்சித்துள்ளனர். ஏடிஎம்மில் இருந்த சிசிடிவி கேமராவின் முகப்பை துணியால் மூடிய நபர்கள், இயந்திரத்தின் கதவை உடைத்துள்ளனர். உடனே அதிலிருந்து வெளியேறிய அபாய ஒலியால் திருட்டுக்கும்பல் அங்கிருந்து ஓடியுள்ளனர். அபாய ஒலி எச்சரிக்கையை அறிந்த வங்கிக் குழுவினர், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இயந்திரத்தை பரிசோதனை செய்ததில், பணம் ஏதும் கொள்ளையடிக்கப்படவில்லை எனத் தெரியவந்தது. தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் சம்பவ இடத்தில் கிடைத்த முக்கிய ஆதாரங்களை காவல் துறையினர் சேகரித்தனர்.

இது தொடர்பாக போடி தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரேநாளில் 4 இடங்களில் திருட்டு சம்பவம் நடந்துள்ளதால் போடி பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.