தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே எஸ்.ரெங்கநாதபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு விற்பனைக் கடை ஒன்று உள்ளது.
மதுரை – தேனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த பட்டாசு கடை நேற்று(ஆகஸ்ட் 2) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் திறக்கப்பட வில்லை.
இந்நிலையில், இன்று( ஆகஸ்ட் 3) காலை வழக்கம் போல கடையை திறக்க வந்த மேலாளர் பஞ்சராஜா, ஷட்டரில் பொருத்தப்பட்டிருந்த பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார்.
கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த லேப்டாப்கள், சிசிடிவி கேமிராக்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
பின்னர் தகவல் கிடைக்கப்பெற்று சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் முக்கிய ஆதாரங்கள் சேகரித்தனர்.
திருட்டு போன பொருள்களின் மதிப்பு ஒரு லட்சம் ஆகும். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.