தேனி: கரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான ஊர்வலம் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையில் விநாயகர் சிலைகள் செய்யபடவில்லை. இந்த நிலையில் தற்போது கரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இம்மாதம் 31ஆம் தேதி நடைபெற உள்ளது.
2 ஆண்டுகளுக்குப்பிறகு நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் அதனையொட்டி நடைபெறும் ஊர்வலத்திற்காக தேனியில் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்து எழுச்சி முன்னணி சார்பில் தேனியில் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
4 அடி முதல் 12 அடி வரையிலான சிலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சிங்க விநாயகர், மயில் வாகன விநாயகர், தாமரை மலர் விநாயகர், உள்ளிட்டப் பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
2000 ரூபாயில் இருந்து 12 ஆயிரம் ரூபாய் வரையிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு உள்ளன. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் இவை கிழங்கு மாவினைக்கொண்டு சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன.
தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விநாயகர் சிலைகள் செய்ய ஆர்டர்கள் வந்துள்ளதாக தெரிவித்தனர்.மேலும் கடந்துமுறையை விட இந்த முறை அதிக அளவில் விநாயகர் சிலை செய்வதற்கான ஆர்டர்கள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:விநாயகர் சதுர்த்தி அழைப்பிதழில் திமுக நிர்வாகியின் பெயர் இடம்