தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி(55). இவரிடம் கடந்த 2010ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவராக இருந்த பார்த்திபன் என்பவர் தொழில் அபிவிருத்திக்காக மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதற்காக 2011ஆம் ஆண்டு தலா ஒரு லட்சம் வீதம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூன்று காசோலைகளை(செக்) கையெழுத்திட்டு வழங்கியுள்ளார்.
ஆனால், அவரது வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் காசோலைகள் திரும்பி வந்தன.
இதனைத்தொடர்ந்து கடந்த 2012ஆம் ஆண்டு வேலுச்சாமி சார்பில் பெரியகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் நேற்று (செப்.30) ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் பார்த்திபனுக்கு மூன்று மாதம் சிறைத் தண்டனை, மூன்று லட்சம் ரூபாய் பணம் செலுத்துமாறு நீதிபதி அருண்குமார் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கப்பலில் வேலை, எங்களுக்கு அமைச்சரை தெரியும் - ஏமாற்றமடைந்த பட்டதாரிகள்!