ETV Bharat / state

மகன் இறந்த துக்கம் தாங்காமல் தந்தை தூக்கிட்டு தற்கொலை

தேனியில் மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகன் இறந்த துக்கம் தாங்காமல் தந்தை தூக்கிட்டு தற்கொலை
மகன் இறந்த துக்கம் தாங்காமல் தந்தை தூக்கிட்டு தற்கொலை
author img

By

Published : Aug 19, 2022, 7:06 AM IST

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து காமயகவுண்டன்பட்டி செல்லும் சாலையில் உள்ள வயல்வெளியில் இருக்கும் மரத்தில், 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்தவர் கம்பம் குரங்கு மாயன் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ரவி என்பது தெரிய வந்தது.

தற்கொலையை தவிர்த்திடுக
தற்கொலையை தவிர்த்திடுக

இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் இவருடைய மனைவி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். மேலும் இவருடைய மகன், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். எனவே கடந்த இரண்டு மாதங்களாகவே ரவி மிகவும் மன வேதனையில் இருந்துள்ளார்.

இந்நிலையில், மகன் உயிரிழந்த துக்கம் தாங்காமல், தந்தை ரவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து கம்பம் வடக்கு காவல்துறையினர்,வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தனியார் தங்கும் விடுதியில் ராணுவ வீரர் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.