தேனி: தேவாரம் ஜமீனுக்கு சொந்தமான பல கோடி மதிப்பில் உள்ள சொத்துக்கள் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருக்கின்றது. இந்த சொத்துக்களை ஸ்ரீ மதி ஜமீன்தாரணி பங்காரம்மாள் அவர்களின் வாரிசுகளால் நிர்வாகிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நாங்கள் தான் தேவாரம் ஜமீன்களின் வாரிசு என்று ஒரு தரப்பினர் கூறி வந்தனர். இதனால் இருதரப்பினருக்கிடையே மோதல் உருவாகி, பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கி வழக்கு நடைபெற்று வருகிறது.
போலி ஆவணங்களை தயார் செய்து ஜமீன்களின் வாரிசுகள் என கூறி சொத்துக்களை அபகரிக்க முயற்சிப்பதாக ஜமீன்களின் உண்மையான வாரிசுகள் என்று கூறப்படும் நபர்கள் எதிர்தரப்பினர் மீது குற்றச்சாட்டு வைத்தனர். இதில் வழக்கு முடியும் வரை ஜமீன்தாரணி வாரிசுகள் என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவாரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிலர் ஜமீன் பெயரை பயன்படுத்தி நிகழ்ச்சி ஒன்று நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜமீன்களின் உண்மையான வாரிசுகள் எனக் கூறப்படும் தரப்பினர் பிரசுரங்களை வைத்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
அதில் தேவாரம் ஜமீன் அன்னதான சத்திரம் மற்றும் அரண்மனை பாராமத்து பணிக்காக அழைத்து வரப்பட்ட குடும்பத்தைச் சார்ந்த நபர் தங்கபாண்டியனுக்கு ஜமீன் என்று குறிப்பிட்டு பொதுமக்களிடம் பொய்யான தகவலை தெரிவிப்பதாகவும், நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது ஜமீன் பெயர்களை பயன்படுத்தக் கூடாது என இருக்கும் நிலையில், ஜமீன் பெயரை பயன்படுத்துவதை தேனி தேவாரம் ஜமீன்தாரணி பங்காரம்மாள் உண்மையான வாரிசுகள் கண்டிக்கிறது என பிரசுரங்களை வைத்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
அப்போது பிரசுரங்களை வைத்து எதிர்ப்பு தெரிவித்த உண்மையான வாரிசு என கூறப்படும் நபர்களை எதிர்தரப்பினர் தாக்கியதால் இருதரப்பினரிற்கு இடையே மோதல் உருவாகியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், இது குறித்து ஜமீன்தார்களின் உண்மை வாரிசுகள் எனக் கூறப்படும் நபர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர். தங்களை தாக்கிய ஜமீன் போலி வாரிசுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜமீன்தார்களின் உண்மையான வாரிசுகள் எனக் கூறப்படும் நபர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த மாதத்தில் தேனி வீரபாண்டியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தேனியில் உள்ள ஜமீன்தார்கள் மற்றும் ராஜ கம்பளத்தார் ஆகியோர் முன்னிலையில் நாங்கள் தான் ஜமீன்தார்களின் உண்மையான வாரிசுகள் என்று அதற்கான ஆதாரங்களை காணொளி வடிவமாக காட்சிப்படுத்தி உள்ளனர்.
மேலும், நீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்திருக்கிறது என்றும் இறுதி தீர்ப்பு விரைவில் வர இருக்கிறது என்று ஜமீன்தாரணி மங்காரா அம்மா அவர்களின் உண்மையான வாரிசுகள் என்று கூறப்படும் நபர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்து இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாநிலம் முழுவதும் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: உள்துறை செயலாளர் அமுதா அதிரடி!