ETV Bharat / state

தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு - மாவட்டம் நிர்வாகம் வேண்டுகோள்! - கரோன வைரஸ்

தேனி: கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கேரளா செல்லும் தமிழ்நாடு தொழிலார்கள் மார்ச் 31ஆம் தேதி வரை, தங்களது வேலைகளுக்கு செல்லவேண்டமென மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

tea-estate-workers-request-new-restriction

author img

By

Published : Mar 17, 2020, 3:16 PM IST

தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், போடி, தேவாரம் உள்ளிட்ட கிராமப்பகுதிகளிலிருந்து நாள்தோறும் சுமார் 600 க்கும் மேற்பட்ட ஜீப்புகளில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் கூலித்தொழிலாளர்கள் கேரளப்பகுதிகளான குமுளி, வண்டிப்பெரியார், சக்குபள்ளம், வண்டன்மேடு, நெடுங்கண்டம், அடிமாலி, கட்டப்பனை, மூணாறு போன்ற பகுதிகளிலுள்ள தோட்டங்களுக்கு கூலிவேலைக்கு செல்கின்றனர்.

தற்போது கரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் காரணமாக வெளிமாநிலங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு - கேரள எல்லைகளை ஒட்டி அமைந்துள்ள 16 மாவட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் தொடர்ந்து எல்லைப் பகுதியில் தீவிர பரிசோதனை முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு புதிய கட்டுபாடு

இதன் காரணமாக கேரள தேயிலை தோட்டங்களில் தினந்தோறும் வேலை செய்து வரும் கூலித்தொழிலார்களை, தேனி மாவட்ட காவல்துறை சர்பாக வேலைக்கு செல்பவர்களை நிறுத்தி, செல்லவேண்டாமென வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். மேலும் சாலைகளில் ஆங்காங்கே விழிப்புணர்வு பாதகைகளை வைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதேசமயம் கேரள வேலைக்கு செல்லும் நபர்களுக்கு மாற்று ஏற்பாடாக, 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலை வழங்குவதாகவும், தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கொரோனா: 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கண்காணிப்பு மையம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.