ETV Bharat / state

விரைவில் முல்லைப் பெரியாறு அணைக்கு தரைவழியாக மின்சாரம்?

author img

By

Published : Nov 4, 2020, 10:06 PM IST

Updated : Nov 4, 2020, 10:11 PM IST

தேனி: முல்லைப் பெரியாறு அணைக்கு வல்லக்கடவு பகுதியில் இருந்து தரைவழியாக மின்சாரம் கொண்டு செல்லக்கூடிய வழித்தடத்தை தமிழக - கேரள அலுவலர்கள் இணைந்து இன்று ஆய்வு செய்தனர்.

முல்லைப் பெரியாறு
முல்லைப் பெரியாறு

கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு வல்லக்கடவு பகுதியிலிருந்து வனப்பகுதி வழியாக மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வந்தன. கடந்த 2000ஆம் ஆண்டு இப்பகுதி வழியாக சென்ற உயர் அழுத்த மின் கம்பி உரசியதில் காட்டு யானை ஒன்று இறந்தது.

இதன் காரணமாக கடந்த 2000ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி அன்று முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்ற மின் இணைப்பை கேரள மின்வாரியம் துண்டித்தது. அன்று முதல் பெரியாறு அணைப்பகுதியில் சோலார் மின் விளக்குகள் மற்றும் ஒளி குறைவான ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதற்கு மாற்று ஏற்பாடாகவும் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், மின் கம்பிகளை வனப்பகுதியில் தரை வழியாக கொண்டு செல்ல தமிழ்நாடு பொதுப்பணித்துறை கேரள அரசிடம் அனுமதி கேட்டது. அதற்கான செலவுத் தொகையாக ரூபாய் 1 கோடியே 66 லட்சத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு அரசு கேரள மின்வாரியத்திற்கு செலுத்தியது. ஆனால் கேரள வனத்துறை அனுமதி தராததால் பணிகள் காலதாமதமாகி வந்தது.

இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்கு தரைவழியாக மின்சாரம் கொண்டு செல்வது குறித்து தமிழக - கேரள பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரிய அலுவலர்கள் இன்று ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து பெரியாறு அணை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து தமிழ்நாடு அலுவலர்கள் கூறுகையில், இன்னும் ஒரு சில நாட்களில் முல்லைப் பெரியாறு அணைத்து தரை வழியாக மின்சாரம் கொண்டு செல்லும் பணிகள் தொடங்க உள்ளதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க:மீண்டும் தலைதூக்கும் முல்லைப்பெரியாறு விவகாரம்

Last Updated : Nov 4, 2020, 10:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.