ETV Bharat / state

'கள் இறக்க விதிக்கப்பட்டத் தடையை அரசு விலக்க வேண்டும்' - நல்லுசாமி

தேனி: கள் இறக்க விதிக்கப்பட்டத் தடையை அரசு விலக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லுசாமி தெரிவித்தார்.

Tamil Nadu Farmers Society Federation Secretary Nallakannu press meet

author img

By

Published : Feb 9, 2020, 7:36 AM IST

இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு தொடக்க விழா மாநாடு தேனியில் நடந்தது. இதில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, மக்கள் கண்காணிப்பகம், தமிழ் தேச மக்கள் முன்னணி, ஒருங்கிணைந்த மாவட்ட பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில பெண்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மேலும் இவ்விழாவில் திரைப்பட இயக்குநர் மு. களஞ்சியம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லுசாமி உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.

மாநாட்டில், மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் கமிட்டி அறிக்கைகள் உடனடியாக அமலுக்கு கொண்டுவர வேண்டும், காப்பு காடுகளின் பரப்பை அதிகரிக்க வேண்டும், 2006 வன உரிமைச் சட்டத்தின்படி ஆதிவாசி மக்களின் வாழ்க்கைக்கான உத்தரவாதம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லுசாமி, “தமிழ்நாட்டில் கள் இறக்க விதிக்கப்பட்டத் தடையை அரசு விலக்க வேண்டும்.

பெரியார் முதல் ஜெயலலிதா வரை கள் இறக்குமதி தொழிலுக்கு ஆதரவாகவே இருந்தனர். ஆகவே தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும்.

மேலும் பெரியாரின் சொத்துக்களை அறக்கட்டளையாக நிர்வகித்து வரும் கீ. வீரமணி கள் இறக்குவதற்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும்.

கள் இறக்கும் தொழிலாளர்கள் நடத்தும் போராட்டங்களில் கீ. வீரமணி பங்கேற்க வேண்டும். இல்லாவிட்டால் அது பெரியாருக்கு இழைக்கும் துரோகமாக கருதப்படும்” என்றார்.

இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு தொடக்க விழா மாநாடு

தொடர்ந்து பேசிய நல்லுசாமி, “ஐந்து மாவட்ட மக்களின் நீராதாரமாக உள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும். அதற்கு பேபி அணையை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மத்திய அரசு அணையை கண்காணிக்க வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அச்சுறுத்தலாக வருகின்ற நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை தேனி மாவட்டத்தில் வர விட மாட்டோம். அதனை எந்த விலை கொடுத்தாவது தடுத்து நிறுத்துவோம்” எனவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் 165 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு!

Intro: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் தேனியில் பேட்டி.

Body: இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு தொடக்க விழா மாநாடு தேனியில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, மக்கள் கண்காணிப்பகம், தமிழ் தேச மக்கள் முன்னணி, ஒருங்கிணைந்த 5மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில பெண்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லுசாமி உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.
இந்த தொடக்க விழா மாநாட்டில், மேற்குத்தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் கமிட்டி அறிக்கைகள் உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும், காப்பு காடுகளின் பரப்பு அதிகரிக்க வேண்டும், 2006 வன உரிமைச்சட்டத்தின்படி ஆதிவாசி மக்களின் வாழ்க்கைக்கான உத்தரவாதம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லுசாமி, தமிழ்நாட்டில் கள் இறக்க விதிக்கப்பட்ட தடையை அரசு விலக்க வேண்டும். பெரியார் முதல் ஜெயலலிதா வரை கள் ஆதரவாளர்களே, எனவே அவர்களின் வழியில் ஆட்சி நடத்துபவர்கள் தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும். மேலும் பெரியாரின் சொத்துக்களை அறக்கட்டளையாக தற்போது நிர்வகித்து வரும் கீ.வீரமணி கள் இறக்குவதற்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். மேலும் கள் இறக்குபலர்கள் நடத்தும் போராட்டங்களில் பங்கேற்க வேண்டும். இல்லாவிட்டால் பெரியாருக்கு இழைக்கும் துரோகமாக கருதப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 5மாவட்ட மக்களின் நீராதாரமாக உள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152அடியாக உயர்த்த வேண்டும், அதற்கு பேபி அணையை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், நடுவன் அரசு அணையை கண்காணிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் மேற்குத்தொடர்ச்சி மலையை அச்சுறுத்தலாக வருகின்ற நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் வர விட மாட்டோம். அதனை எந்த விலை கொடுத்தாவது தடுத்து நிறுத்துவோம் என்றார்.

Conclusion: பேட்டி : நல்லுசாமி ( செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு)

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.