ETV Bharat / state

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடுத்தடுத்து இருவர் தற்கொலை முயற்சி!

தேனி: ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் அடுத்தடுத்து இருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்வவம் அலுவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Nov 18, 2019, 11:06 PM IST

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை செய்ய முயன்றவர்கள்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டடம் நடைபெற்றது. புகார் மனுக்கள் அளிப்பதற்காக பொதுமக்கள் ஏராளாமானோர் குவிந்தனர். புகார் அளிக்க வருபவர்களில் சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதால் அலுவலக நுழைவாயிலில் காவல் துறையினரின் பலத்த சோதனைகளுக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

தேனி அருகே உள்ள மஞ்சிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மனைவி ஈஸ்வரி(55) ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். கணவரை இழந்த இவரது நிலத்தை உறவினர்கள் ஆக்கிரமிப்பு செய்ததாக காவல் நிலையத்தில் பல முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

பின்பு, அருகிலிருந்தவர்கள், பெண் காவலர்கள் ஆகியோர் உடலில் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். இது குறித்து, விசாரணை நடத்த தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்றனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மற்றொருவர் பெட்ரோல் கேனுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த கண்ணப்பன் (50) என்பவர், தன்னிடம் சுமார் மூன்று லட்சம் ரூபாய் பணத்தை போடியைச் சேர்ந்த செல்வம் என்ற அரசியல் பிரமுகர் பெற்றுக்கொண்டு ஏமாற்றியது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உரிய தீர்வு எட்டாததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட வந்ததாகத் தெரிவித்தார்.

ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த காவல் துறையினர் கண்ணிப்பினை மீறி அடுத்தடுத்து இருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.

இதையும் படிங்க : செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்..!

Intro: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடுத்தடுத்து இருவர் தற்கொலை முயற்சி. காவல்துறையினர் விசாரணை.

Body: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டடம் நடைபெற்றது. இதற்காக புகார் மனுக்கள் அளிப்பதற்காக பொதுமக்கள் இன்று ஏராளாமானோர் குவிந்தனர். புகார் அளிக்க வருபவர்களில் சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதால் அலுவலக நுழைவாயிலில் காவல்துறையினரின் பலத்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் தேனி அருகே உள்ள மஞ்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த ராமசாமி என்பவரது மனைவி ஈஸ்வரி(55) தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். கணவரை இழந்த இவரது வீட்டடி நிலத்தை உறவினர் ஆக்கிரமிப்பு செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்து தீர்வு காணப்படவில்லை எனக்கூறி தனக்கு தானே உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அருகில் இருந்தவர்கள் மற்றும் பெண் காவலர் மீட்டு உடலில் தண்ணீர் ஊற்றி காப்பாற்யினர். பின்னர் இது குறித்து விசாரணை நடத்த தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் ஆட்சியர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொருவர் பெட்ரோல் பாட்டிலுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த கண்ணப்பன் (50) என்பவர், தன்னிடம் சுமார் ரூ.3லட்சம் பணத்தை போடியை சேர்ந்த செல்வம் என்ற அரசியல் பிரமுகர் பெற்றுக்கொண்டு ஏமாற்றியது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உரிய தீர்வு எட்டாததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட வந்ததாகத் தெரிவித்தார்.
ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த காவல்துறையினர் கண்ணப்பனை தடுத்து நிறுத்தி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

Conclusion: அடுத்தடுத்து இருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.