தேனி மாவட்டத்தில் குடும்ப நல நீதி மன்றம், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைக்கு எதிரான வழக்குகளை விசாரணை செய்து தீர்வு காண்பதற்கு தனியாக நீதிமன்றம் ஆகியவை இல்லாத நிலை இருந்துவந்தது. இதனால் புதிதாகச் சிறப்பு நீதிமன்றங்கள் தொடங்கப்பட வேண்டும் என்று தேனி மாவட்ட வழக்கறிஞர்கள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்துவந்தனர்.
அதனடிப்படையில் தமிழ்நாடு சட்டத்துறை மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் நேற்று தேனி மாவட்டத்தில் புதிய நீதிமன்றங்கள் செயல்பட அறிவிக்கப்பட்டது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடும்ப நல நீதிமன்றம், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைக்கு எதிரான வழக்குகளை விசாரித்து தீர்வு காணும் நீதிமன்றங்களை தேனி மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா திறந்து வைத்தார்.
இந்த நீதிமன்றங்களில் திறப்பு விழாவின்போது நீதித்துறை நடுவர், நீதிமன்ற நீதிபதி, கூடுதல் அமர்வு நீதிபதி, வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: 'வி.ஏ.ஓ. என்றால் வெட்டி ஆபிஸர்' - கொந்தளித்த விவசாயி!