ETV Bharat / state

பஹ்ரி எஸ்டேட் பிரைவேட் நிறுவனத்திற்கு 3 கோடி ரூபாய் அபராதம் - தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் - தேனி மாவட்டம்

கொடைக்கானல் அடிவாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் வீடுகள் மற்றும் விடுதிகள் கட்டிய பஹ்ரி எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதித்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்
தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்
author img

By

Published : Aug 2, 2022, 10:02 PM IST

தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி பகுதியானது கொடைக்கானல் மலை அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள பகுதியாகும். கொடைக்கானல் வன விலங்கு சரணாலயத்தில் உள்ள வனப்பகுதியினை ஒட்டி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் மிகப்பெரிய கட்டுமானம் கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன.

ஆனால், இந்த விதிமுறைகளைப்பின்பற்றாமல் பஹ்ரி எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் வில்லாக்கள், மற்றும் குடியிருப்புகள், ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதியினை கட்டியுள்ளது.

இந்த சட்டவிரோத குடியிருப்புகளால் வன விலங்குகள் பாதிக்கும் அபாயம் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் இவை கட்டப்பட்டு இருப்பதாக ஸ்ரீவைகுண்டம் பகுதியைச்சேர்ந்த வழக்கறிஞர் ராமசுப்பு என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் புகார் மனு அளித்தார்.

இந்த புகார் மனு மீதான விசாரணை கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவுற்றதால், நீதிபதி கே.ராமகிருஷ்ணன், நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பல்வேறு இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

அவர்களின் உத்தரவில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டங்கள் சட்ட விரோத அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களாகவே கருதப்படும் என்றும், ஆனால் கட்டுமான நிறுவனங்களின் தவறுக்காக கட்டடங்களை வாங்கிய பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இந்த கட்டுமானங்களை இடிக்கத்தேவையில்லை.

மேலும் பஹ்ரி எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விதிமீறலை ஈடு செய்யும் விதமாக 3 கோடி ரூபாயினை இழப்பீடாகத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்குச் செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செலுத்த தவறும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்றும், தேனி மாவட்ட ஆட்சியருடன் இணைந்து மாசு கட்டுபாட்டு வாரிய அலுவலர்கள் மறு சீரமைப்புப்பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கையினை தயாரிக்க வேண்டும்.

இதற்காக இழப்பீட்டுத்தொகையினை பயன்படுத்த வேண்டும் என்றும், மேலும் பஹ்ரி எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கட்டுமானப்பணிகளால் சரணாலயப்பகுதிகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்ய மூத்த அலுவலர் ஒருவரை தேசிய வனவிலங்கு வாரியம் அமைக்க வேண்டும்.

மேலும் பஹ்ரி எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கட்டுமானப்பணிகளுக்காக நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதா? என்பதைக் கண்டறிய தேனி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அடிவாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் வீடுகள் மற்றும் விடுதிகள் கட்டிய பஹ்ரி எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதித்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி வழக்கில் அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.