தேனி: பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் அகமலை, கண்ணகரை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மழை பொழிவு இல்லாததால், அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் அணையின் நீர் மட்டம் சரிந்துள்ளது.
இதனால் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியிலிருந்து படிப்படியாக குறைந்து தற்பொழுது அணையின் நீர்மட்டம் 121.03 அடியாக குறைந்துள்ளது.
மேலும் அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்காக நீர் திறக்க பத்து நாட்கள் உள்ள நிலையில் சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், அணை பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் மழை பொழிவை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கும்பக்கரை அருவியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப்பயணிகள்