தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள தர்மத்துப்பட்டியைச் சேர்ந்தவர்கள் பம்மையன் (70), ராமுத்தாய் (65) தம்பதி. இவர்களுக்கு மகேஸ்வரி, ஜோதி, புவனேஷன், பாலமுருகன் என இரண்டு மகன், மகள்கள் உள்ளனர்.
மகன் புவனேஷன் (40) என்பவர் பெற்றோரை ஏமாற்றி நகை, பணம், வீட்டு பத்திரத்தை அபகரித்துள்ளார். மேலும் அவர்களை விட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார்.
எனவே பாதிக்கப்பட்ட பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அதில், "கூலி வேலை செய்து சம்பாதித்தோம். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தலைவலி மருத்து எனக் கூறி புவனேஷன் எங்களுக்கு மயக்க மருத்து கொடுத்தார்.
பின்னர் எங்களுக்கு சொந்தமான 7 சவரன் நகை, 50 ஆயிரம் பணம், வீட்டு பத்திரம் ஆகியவற்றை அபகரித்துவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் எங்களை வீட்டை விட்டு அனுப்பி விட்டார்.
காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புவனேஷனிடம் உள்ள எங்களது சொத்துக்களை மாவட்ட ஆட்சியர் மீட்டு தர வேண்டும்" என குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றி வீடு அபகரிப்பு - மீட்டுத்தரக் கோரி கண்ணீர் மல்க மனு