ETV Bharat / state

தேனி அருகே காரில் கடத்திய உடல் உறுப்புகள்-நரபலி கொடுக்கப்பட்டதா என போலீசார் விசாரணை! - கடத்தல் செய்தி

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் உடல் உறுப்புகள் காரில் பார்சல் செய்து கடத்தி வரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பிடிபட்ட 4 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி
theni
author img

By

Published : Aug 5, 2023, 12:19 PM IST

தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையம் பழைய பைபாஸ் சாலையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுகுமாரி தலைமையில் போலீசார் நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த நான்கு பேரும் முன்னுக்குப்பின் முரணாக சந்தேகப்படும்படி பதில் அளித்தனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காருடன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் மூன்று பேர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் ஒருவர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

மேலும், அவர்கள் வைத்து இருந்த பையை பிரித்து சோதனையிட்டதில் நாக்கு, மூளை கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தனித்தனியாக பிளாஸ்டிக் கவரில் பார்சலாக சுற்றி வைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து அவை விலங்குகளின் உடல் உறுப்புக்களா இல்லை மனித உடல் உறுப்புக்களா என்பது தெரியவில்லை.

இதையும் படிங்க: கோவை பெண் கொலை வழக்கு... சூப் கடை உரிமையாளர் கைது; அம்பலப்பட்ட உறவு!

இது குறித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திற்கும், வனத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் உறுப்பு பாகங்கள் தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே இது மனித உறுப்பு என்றால் நரபலி கொடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் பிடிபட்ட நான்கு பேரில் ஒருவர் மீது ஏற்கனவே மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு மோசடி செய்ததாகவும் வழக்குகள் பதிவாகியுள்ளது. எனவே யாரேனும் கொலை செய்து நரபலி கொடுத்து அவரது உடல் உறுப்புகளை விற்பனைக்காக கொண்டு சென்றார்களா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 'என் மகளுக்கு அரசியல் செல்வாக்கு உள்ளது' எனக்கூறி ரூ.18 லட்சம் வரை பணமோசடி செய்த பெண் கைது!

மற்ற மூவரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அவர்கள் வந்த கார் TN 67 AR 3641 என்ற பதிவு எண் சிவகங்கை மாவட்டம் சார்ந்தது என்பது தெரியவந்துள்ளது. மேலும், தேனி மாவட்டத்தில் உடல் உறுப்புக்கள் காரில் பார்சல் செய்து கடத்தி வரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: திருவண்ணாமலையில் அரசு பேருந்து கவிழ்ந்து 15 பேர் படுகாயம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.