ETV Bharat / state

கேரளாவிற்கு மணல் கடத்திய ஏழு லாரிகள் பறிமுதல்: கனிம வளத்துறையினர் நடவடிக்கை - ஏழு லாரிகளில் சட்டவிரோதமாக மணல் கடத்தல்

தேனி : கேரளாவுக்கு அனுமதியின்றி எம் சாண்ட் மணல் கொண்டு சென்ற ஏழு லாரிகளை கனிம வளத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மணல்
author img

By

Published : Oct 17, 2019, 8:36 AM IST

தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு மணல், எம் சாண்ட் மணல் அதிகளவில் கடத்தப்படுவதாக கனிம வளத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் கனிம வளத்துறை இணை இயக்குனர் விஜய்குமாரன் தலைமையில், ஆர்.ஐ. கண்ணன், மதுரை மண்டல பறக்கும்படை அலுவலர்கள் கொண்ட குழுவினர் நேற்று அதிகாலை லோயர்கேம்ப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் 7 லாரிகளில், கேரளா கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள எம் சாண்ட் மணல் மற்றும் அனுமதியை விட அளவுக்கு அதிகமான ஜல்லிக் கற்களை ஏற்றிச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து லாரிகளை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து கனிம வளத்துறை இணை இயக்குனர் விஜய்குமாரன் கூறுகையில், ''எம் சாண்ட் கேரளாவுக்கு கொண்டு செல்ல அனுமதியில்லை. ஆனால் ஜல்லி கொண்டு செல்ல அனுமதி உள்ளது. ஆனாலும் இவர்கள் மூன்று மற்றும் நான்கு யூனிட் கொண்டு செல்ல அனுமதி பெற்றுக்கொண்டு, ஆறு யூனிட் வரை லாரியில் கொண்டு சென்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதற்கு அபராதம் விதிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:வருவாய் அலுவலர்கள் சோதனையில் சிக்கிய கடத்தல் மணல்!

Intro:         தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு அனுமதியின்றி டிப்பர் லாரிகள் பறிமுதல்.
Body: தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு மணல் மற்றும் எம் சாண்ட் மணல் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ்வப்போது இரவு நேரங்களில் கேரளாவுக்கு மணல் மற்றும் எம் சாண்ட் மணல் கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று லாரிகளில் எம் சாண்ட் மணல் கேரளாவுக்கு கடத்திச் செல்வதாக தேனி மாவட்ட கனிம வளத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து இணை இயக்குநர் விஜய் குமாரன் தலைமையில், ஆர்.ஐ கண்ணன் மற்றும் மதுரை மண்டல பறக்கும்படை அதிகாரிகள் கொண்ட குழு இன்று தமிழக கேரள எல்லைப்பகுதியான தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
         அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் லாரிகளில், கேரளா கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள எம் சாண்ட் மணல் மற்றும் அனுமதியைவிட அளவுக்கு அதிகமான ஜல்லி ஏற்றி கடத்திச் செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து அனுமதியின்றி வந்த ஏழு லாரிகளையும் கனிம வளத்துறையினர் பறிமுதல் செய்தனர். பின் பறிமுதல் செய்த அந்த லாரிகளை பாதுகாப்பு கருதி லோயர்கேம்ப் காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

Conclusion: இது குறித்து கனிம வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், எம் சாண்ட் கேரளா கொண்டு செல்ல அனுமதி இல்லை. ஜல்லி கொண்டு செல்ல அனுமதி உள்ளது. ஆனால் இவர்கள் ஆறு யூனிட் வண்டியில், 3 மற்றும் 4 யூனிட் பாஸ் போட்டு ஜல்லி கொண்டு செல்கின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. நேற்றைய சோதனையில் ஏழு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு அபராதம் விதிக்கப்படும். கைப்பறிய இந்த ஏழு லாரிகளும் உத்தமபாளையம் சப்கலெக்டரிடம் ஒப்படைக்க உள்ளதாகத் தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.