தேனி: ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது மூப்பு காரணமாக நேற்று முன் தினம்(பிப்.24) காலமானார். அவரின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. இதற்காக, இரங்கல் தெரிவிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு நேரில் சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த ஓ.பழனியம்மாள் திருவுருவப்படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செய்தார்.
அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவரது மகன்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களையும் சீமான் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:சென்னை தியாகராய நகரில் விரைவில் வருகிறது ஆகாய நடை மேம்பாலம்… இனி கூட்ட நெரிசல் இன்றி செல்லலாம்!