ETV Bharat / state

ஆனி மாதம் பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு - ஆனி மாதம் பூஜை

ஆனி மாதம் பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. நாளை அதிகாலை முதல் 5 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சபரிமலை கோயில் நடை திறப்பு
சபரிமலை கோயில் நடை திறப்பு
author img

By

Published : Jun 14, 2022, 7:39 PM IST

தேனி: ஆனி மாதம் பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து தீபாரதனை நடைபெற்றது. இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

நாளை முதல் வரும் 19ஆம் தேதி வரை தினமும் கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தமன பூஜை, படி பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இந்த நாட்களில் தினமும் நெய்யபிஷேகமும் நடைபெறும். 19ஆம் தேதி இரவு கோயில் நடை சாத்தப்படும்.

சபரிமலை கோயில் நடை திறப்பு

அன்றுடன் ஆனி மாதம் பூஜைகள் நிறைவடையும். மீண்டும் ஆடி மாதம் பூஜைகளுக்காக ஆகஸ்ட் 16ஆம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு நாளை அதிகாலை முதல் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும். நிலக்கல்லில் உடனடி முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'கோவை சரளா ஒரு நடிப்பு ராட்சசி..!' - கமல்ஹாசன் புகழாரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.