தேனி மாவட்டம் தெப்பம்பட்டி அருகே உள்ள சுந்தர்ராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி மகள் மாலதி(17). 12ஆம் வகுப்பு படித்து வரும் இவர், தனது சகோதரி பூமாதேவி என்பவருடன் ஆட்டுக்குட்டிக்கு இலை, தழைகள் பறிப்பதற்காக தோட்டப் பகுதிக்குச் சென்றுள்ளார்.
அப்போது சேவா நிலையம் அன்னை டோரா கல்லூரி நிர்வாகத்திற்கு பாத்தியப்பட்ட தண்ணீர் இல்லாத கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் துரிதமாக செயல்பட்டு சுமார் 150அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுமியை உயிருடன் மீட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், பலத்த காயமடைந்த சிறுமியை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ராஜதானி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மூன்று பலன்களுடன் வடிவமைக்கப்பட்ட சோலார் மிதிவண்டி! கல்லூரி மாணவர் அசத்தல்!