ETV Bharat / state

‘மதம், தெய்வத்தின் பெயரில் இனி ஒரு சொட்டு ரத்தம் சிந்தக்கூடாது’ - தா. பாண்டியன் - Communist senior Leader dha. pandian byte

தேனி: மதம், தெய்வத்தின் பெயரில் இந்தியாவில் இனி ஒரு சொட்டு ரத்தம் சிந்தக் கூடாது என்றும், அயோத்தி தீர்ப்பை இந்திய மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தா. பாண்டியன் பேட்டி
author img

By

Published : Nov 9, 2019, 11:49 PM IST

தேனிக்கு வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா. பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘27 வருடங்களுக்கு மேலாக அயோத்தி வழக்கு ஒரு விவாதப் பொருளாக மாறியது. 13ஆம் தேதிக்கு முன்னதாக தீர்ப்பு வெளியாகியுள்ளது. தீர்ப்பு குறித்து இந்திய மக்கள் அனைவரும் கூர்ந்து கவனிக்க வேண்டும். 5 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை ஒருமித்து வழங்கியுள்ளார்கள். இந்த தீர்ப்பை அனைத்து தரப்பு மக்களும் ஒருமித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தா. பாண்டியன் பேட்டி

அனைவரும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்க வேண்டும். தீர்ப்பு குறித்து எந்த ஒரு விமர்சனமும் வைக்கக் கூடாது. மதத்தின் பெயரில் இந்தியாவில் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக்கூடாது’ என்றார்.

இதையும் படிங்க: உள்ளாட்சி உங்களாட்சி 2: 'இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை'யான வெள்ளைக்கார துரையின் கதை!

Intro: மதம், தெய்வத்தின் பெயரில் இந்தியாவில் இனி ஒரு சொட்டு இரத்தம் சிந்தக் கூடாது..
அயோத்தி தீர்ப்பை இந்திய மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும், என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தேனியில் பேட்டி.

Body: தேனி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். தேனியில் நடைபெற்ற சந்திப்பின் போது பேசிய அவர், 27 வருடங்களுக்கு மேலாக அயோத்தி வழக்கு ஒரு விவாதப் பொருளாக மாறியது. 13ஆம் தேதிக்கு முன்னதாக தீர்ப்பு வெளியாகியுள்ளது. தீர்ப்பு குறித்து இந்திய மக்கள் அனைவரும் கூர்ந்து கவனிக்க வேண்டும். 5 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை ஒருமித்து வழங்கியுள்ளார்கள். இந்த தீர்ப்பை அனைத்து தரப்பு மக்களும் ஒருமித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்க வேண்டும். தீர்ப்பு குறித்து எந்த ஒரு விமர்சனமும் கூடாது. மதத்தின் பெயரில் இந்தியாவில் ஒரு சொட்டு ரத்தம் சிந்தக்கூடாது என்றார்.
தீர்ப்பு குறித்து எந்த ஒரு கலவரமும் இனி அளவில் நிகழக் கூடாது. மத்திய அரசு அதனை கண்காணிக்க வேண்டும். அனைத்து கட்சியினரும் இதனை ஏற்று செயல்பட வேண்டும். மீண்டும் கலவரத்திற்கு வித்திடக் கூடாது. அனைத்து மக்களும், கட்சியினரும், மத அமைப்பினரும் இதற்காக ஒத்துழைக்க வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்து இதுவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தாக இருக்கும் என நம்புகிறேன். கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான். ஒரு குறிப்பிட்ட இடத்தில் அடைந்து விட முடியாது. அமைதியை நிலை நாட்டுங்கள், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நல்லதா, கெட்டதா என ஆராயக்கூடாது. அனைவரும் ஒருமித்து ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்திய பொருளாதாரத்தை அதல பாதாளத்துக்கு கொண்டு சென்றவர் பிரதமர் மோடி. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என்று அன்று நான் கூறினேன். அது போலவே இப்போதும் உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் பாஜகவிற்கு வந்துவிடுவார் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். அவரும் தற்போது எனக்கு காவி சாயம் பூச வேண்டாம் எனத் தெளிவாகச் சொல்லி விட்டார். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்காக யோசிக்கிறது. தமிழகத்தில் பாஜக ஒரு அனாதையாக்கப்பட்ட கட்சியாக இருக்கிறது என தெரிவித்தார்.

Conclusion: பேட்டி : தா.பாண்டியன் ( மூத்த தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.