ETV Bharat / state

ஊரடங்கால் முடங்கிய தொழிலாளர்கள்: உதவிக்கரம் நீட்டிய ரஜினி மக்கள் மன்றத்தினர்

தேனி: ஊரடங்கால் முடங்கிய புகைப்படக் கலைஞர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரஜினி மக்கள் மன்ற வர்த்தக அணியினர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

rajini fans club members give relief Theni needy workers

author img

By

Published : May 23, 2020, 7:19 PM IST

கரோனா நோய் பரவல் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊடரங்கு உத்தரவு தொடர்ந்து 50 நாள்களுக்கும் மேலாக நீடிக்கிறது. இதனால் கடைகள், தொழில், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டதால் பலரும் வேலை வாய்ப்பு கிடைக்காமல் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

இவர்களுக்கு தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் தங்களால் இயன்ற உதவிகளை செய்துவருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற வர்த்தக அணி சார்பில் ஊரடங்கால் நலிவடைந்தவர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கி உதிவிக்கரம் நீட்டியுள்ளனர். சலலைத் தொழிலாளர்கள், முடி திருத்துவோர், ஆட்டோ ஓட்டுநர்கள், புகைப்படக் கலைஞர்கள், வயது முதிர்ந்தவர்கள் என நலிவடைந்த 150 நபர்களுக்கு ரூ. 1000 மதிப்பிலான அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட 21 வகையான பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. தகுந்த இடைவெளியை கடைபிடித்து முகக் கவசம் அணிந்தவாறு பொருட்களை மக்கள் பெற்றுச் சென்றனர்.

உதவிக்கரம் நீட்டிய ரஜினி மக்கள் மன்றத்தினர்

நடிகர் ரஜினிகாந்த் போன்று வேடமணிந்து வந்த நாடகக்கலைஞர், ரஜினி மக்கள் மன்ற வர்த்தக அணி நிர்வாகிகள் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.

இதையும் படிங்க...வாழ்வாதாரம் இழந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவிய உதயநிதி ஸ்டாலின் மன்றம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.