ETV Bharat / state

முதலமைச்சர் தொடங்கி வைத்த குடிநீர் திட்டத்தை எதிர்த்து பொது மக்கள் தீர்மானம்! - தேன்மாவட்ட அண்மைச்செய்திகள்

பெரியகுளம் அருகே. தங்களின் நீண்டநாள கோரிக்கையான சோத்துப்பாறை அணை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு பதிலாக, ரூ. 9.54 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்ட புதிய குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

குடிநீர் திட்டத்தை எதிர்த்து பொது மக்கள் தீர்மானம்

author img

By

Published : Dec 25, 2020, 4:50 PM IST

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்டது தென்கரை பேரூராட்சி. டி.கள்ளிப்பட்டி, டி.வெங்கடாசலபுரம், கைலாசபட்டி ஆகிய கிராமங்களை உள்ளடக்கி 15 வார்டுகளைக் கொண்ட இப்பேரூராட்சியில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு, தென்கரை பேரூராட்சி மக்களின் குடிநீர் தேவைக்காக ரூ.9.54கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டத்தை ஒன்றை முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். இந்நிலையில் புதிய குடிநீர் திட்டம் தொடர்பாக டி.கள்ளிப்பட்டியில் உள்ள முத்தையா கோவிலில் கூட்டம் நடத்திய தென்கரை பகுதி மக்கள், அத்திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

சோத்துப்பறை அணை கூட்டுக்குடிநீர்

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "தற்போது அறிவித்துள்ள திட்டத்தின் படி, 15வார்டுகளுக்கும் ஆழ்துளை மற்றும் உறை கிணறுகள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்வதற்கு திட்டமிட்டப்பட்டுள்ளது. இதனால் சீரான குடிநீர் விநியோகம் கிடைப்பதற்கு வாய்ப்பு குறைவு; கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். தென்கரை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை சோத்துப்பறை அணை கூட்டுக்குடிநீர் திட்டமாகும். புதிய குடிநீர் திட்டத்திற்கு ஒதுக்கியுள்ள நிதியின் மூலம் சோத்துப்பாறை அணையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து பொதுமக்களின் எதிர்ப்பை மீறி புதிய குடிநீர் திட்டம் செயல்டுத்தப்பட்டால் அனைத்து தரப்பு மக்களும் ஒருங்கிணைந்து போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அரசியலுக்காக கிராமசபைக் கூட்டம் நடத்தும் திமுக’ - சி.பி.ராதாகிருஷ்ணன் தாக்கு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.