Bhogi: தேனி: தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் திருநாள் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மார்கழி கடைசிநாள் இன்று (ஜன.14) போகிப் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வீடுகள் மற்றும் விவசாயத் தோட்டங்களில் காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
அதற்காக மா இலை, வேப்ப இலை, ஆவாரம்பூ, கூரைப்பூ, பிரண்டை, வேப்ப இலை உள்ளிட்டவர்களை ஒன்றாக இணைத்துக்கட்டி அவற்றை வீடுகளிலும் விவசாயத்தோட்டங்களிலும் உள்ள நுழைவுவாயில் முகப்பில் பொங்கல் விழாவிற்கு முதல் நாள் கட்டுவது வழக்கம். அதற்காக இன்று பெரியகுளம் பகுதியில் காப்பு கட்டு விற்பனை அமோகமாக நடைபெற்றது.
மேலும், பொங்கல் விழாவிற்கு முக்கிய தேவையான மஞ்சள் கிழங்கு, கரும்பு உள்ளிட்டவைகளின் விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது. காலை முதல் பொதுமக்கள் கரும்பு, மஞ்சள் கிழங்குகளை வாங்கிச்செல்வதால் விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதில் காப்பு கட்டு கட்டுவதற்காக உள்ள ஒரு கட்டின் விலை 15 முதல் 20 ரூபாய்க்கும், மஞ்சள் கிழங்கின் விலை 50 ரூபாய்க்கும், 10 கரும்பு உள்ள ஒரு கட்டு 450 முதல் 500 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: Good time for pongal:பொங்கல் வைப்பதற்கு உகந்த நேரம் எது?: விளக்கமளிக்கிறார் பிரபல ஜோதிடர்!