ETV Bharat / state

கள்ளச்சாராய விற்பனை: போலீசார் தேடுதல் வேட்டை

தேனி: சட்டவிரோதமாக மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா என காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

police investigating about illegal liquor supply in theni

author img

By

Published : Apr 17, 2020, 3:10 PM IST

கரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அரசு மதுபானக் கடைகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா என்பது குறித்து ஆண்டிபட்டி அருகேயுள்ள வருசநாடு, காமராஜபுரம், கொடிகுளம்குடிசை ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்கும்வகையில், கருப்பட்டி, பட்டை, கடுக்காய் போன்ற பொருட்களை மொத்தமாக யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவது குறித்து சோதனை மேற்கொள்ளும் காவல்துறை

முன்னதாக தேனி மாவட்டத்தில், சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக இருபதிற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: யூ-டியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய பாய்ஸ்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.