ETV Bharat / state

பெரியகுளம் அருகே களைகட்டிய மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் - Theni State Level Volleyball Tournament

தேனி: பெரியகுளம் அருகே சீதையம்மாள் நினைவு சுழற்கோப்பைக்கான 31ஆவது ஆண்டு மாநில அளவிலான கைப்பந்தாட்ட போட்டிகள் தொடங்கப்பட்டது.

பெரியகுளம் மாநில அளவிலான கைப்பந்து போட்டி தேனி மாநில அளவிலான கைப்பந்து போட்டி மாநில அளவிலான கைப்பந்து போட்டி Periyakulam State Level Volleyball Tournament Theni State Level Volleyball Tournament State Level Volleyball Tournament
Periyakulam State Level Volleyball Tournament
author img

By

Published : Jan 16, 2020, 11:05 AM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டியில் பொங்கல் விழாவை முன்னிட்டு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் சார்பாக 31ஆவது ஆண்டு சீதையம்மாள் நினைவு சுழற்கோப்பைக்கான மாநில அளவிலான கைப்பந்தாட்ட போட்டிகள் நேற்றுத் தொடங்கின. மூன்று நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டிகள் பகல், இரவு ஆட்டங்களாக நடைபெற்று வருகின்றது.

இப்போட்டியில் தமிழ்நாட்டின் சென்னை, திருச்சி, பொள்ளாச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தப் போட்டிகள் அனைத்தும் லீக் சுற்று முறையில் நடைபெற்று வருகின்றது. நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் சென்னை புனித ஜோசப் கல்லூரி, சென்னை வைஷ்ணவா கல்லூரி அணிகள் மோதின. இதில், சென்னை புனித ஜோசப் அணி 25க்கு 18, 25க்கு 21 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து, இரண்டாவதாக சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், சென்னை சத்திய பாமா கல்லூரி அணிகள் மோதிக்கொண்டன. இதில், சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக அணி 25க்கு 17, 25க்கு 20 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. மூன்றாவதாக நடைபெற்ற போட்டியில் திருச்சி தமிழ்நாடு காவல்துறை மற்றும் பொள்ளாட்சி எஸ்.டி.சி பொறியியல் கல்லூரி அணிகள் மோதிக்கொண்டதில், திருச்சி தமிழ்நாடு காவல்துறை அணி 25 க்கு 17, 25 க்கு 20 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.

மாநில அளவிலான கைப்பந்துப் போட்டிகள்

இதனையடுத்து, இன்று நடைபெறும் போட்டிகளில் அதிகப் புள்ளிகளை பெறுகிற இரண்டு அணிகள் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பங்கேற்று சுழற்கோப்பையை வெல்லும். இந்தப் போட்டியை தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமானோர் கண்டு களித்தனர்.

இதையும் படிங்க:

மாநில அளவிலான கைப்பந்துப் போட்டி - தொடங்கி வைத்து அமைச்சர்

Intro: பொங்கல் விழாவை முன்னிட்டு இளைஞர் விளையாட்டு கழகம் சார்பில் சீதையம்மாள் நினைவு சுழற்கோப்பைக்கான 31ஆம் ஆண்டு மாநில அளவிலான கைப்பந்தாட்ட போட்டிகள் துவக்கம்.Body: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் பொங்கல் விழாவை முன்னிட்டு இளைஞர் விளையாட்டு கழகத்தின் சார்பாக 31 வது ஆண்டு சீதையம்மாள் நினைவு சுழற்கோப்பைக்கான மாநில அளவிலான கைப்பந்தாட்ட போட்டிகள் துவங்கியது. இன்று முதல் 3 நாட்கள் நடைபெரும் போட்டிகள் பகல், இரவு ஆட்டங்களாக நடைபெற்று வருகின்றது. இப்போட்டியில் தமிழகத்தின் சென்னை, திருச்சி, பொள்ளாச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 10 அணிகள் பங்கேற்று உள்ளது. போட்டிகள் அனைத்தும் லீக் சுற்று முறையில் நடைபெற்று வருகின்றது.
இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் சென்னை புனித ஜோசப் கல்லூரி மற்றும் சென்னை வைஸ்னவா கல்லூரி அணிகள் மோதின. இதில் சென்னை புனித ஜோசப் அணி (25 க்கு 18) (25 க்கு 21) என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவதாக சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைகழகம் மற்றும் சென்னை சத்திய பாமா கல்லூரி அணிகள் மோதிக்கொண்டன. இதில், சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக அணி (25 க்கு 17) - (25 க்கு 20) வெற்றி பெற்றது. மூன்றாவதாக நடைபெற்ற போட்டியில் திருச்சி தமிழ்நாடு காவல்துறை மற்றும் பொள்ளாட்சி எஸ்.டி.சி பொறியியல் கல்லூரி அணிகள் மோதிக்கொண்டதில், திருச்சி தமிழ்நாடு காவல்துறை அணி (25 க்கு 17) - (25 க்கு 20) என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.
இதனையடுத்து இன்று மற்றும் நாளை நடைபெறும் போட்டிகளில் அதிக புள்ளிகளை பெறுகிற இரண்டு அணிகள் நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் பங்கேற்று சுழற்கோப்பையை வெல்லும்.
Conclusion: இந்தப் போட்டியை தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமானோர் கண்டு களித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.